FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Varun on January 21, 2013, 09:51:30 AM

Title: முடிஞ்சா சிரிங்க
Post by: Varun on January 21, 2013, 09:51:30 AM


1. கல்யாணம் ஆச்சுன்னா உங்களுக்கு இருக்கற தோஷம் நிவர்த்தியாயிடும்..அது
அப்பறம் உங்க வாழ்க்கைப் பக்கமே எட்டிப்பாக்காது!.
அப்படியா அப்படி என்ன தோஷம் ஜோசியரே அது.
சந்தோஷம்"!!

2. வள்ளுவருக்கு வளையல் மோதிரம் நெக்லஸை விட தோடு தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா
எப்படி
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!

3.சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
ராமு: அதனால...
சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம்
செய்யப் போறேன்.

4.ஆசிரியர்: மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்
மாணவி : (சோகமாக)வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

5.டாக்டர்:என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது
நோயாளி:டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்.

6.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.

7.ஆசிரியர் கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே
கோபு சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்.

8.உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

9. பூக்காரி பொண்ண கட்டினது பெரிய தப்புடா ஏன்டா அப்படி சொல்ற
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.

10.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.

11.என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!

12.ஆசிரியர்: டேய் 1000 கிலோகிராம் டன் அப்போ 3000 கிலோ கிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.
ஆசிரியர் :....??....
Title: Re: முடிஞ்சா சிரிங்க
Post by: User on February 09, 2013, 11:14:44 AM
really enjoyed many of them..thx for sharing