FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 20, 2013, 10:42:23 PM

Title: ஓட்டை தம் மகத்துவங்கள் !!
Post by: aasaiajiith on January 20, 2013, 10:42:23 PM
ஒட்டை ஒட்டை ஒட்டையென
ஓட்டையை மட்டும் மட்டமாய்
மட்டந்தட்டும் மதிமங்கிய கூட்டமே ! 

ஓட்டையின் மகத்துவங்களை
உண்மையான சில மேன்மைகளை,
காட்டமாய் இன்றி ஊட்டமாய் சிலவரிகளை
மிகமிக  மென்மையாக இங்கே
ஓர்முறை  எடுத்துரைக்க விரும்புகிறேன் !

அகிலத்தில் பலரும் மனதினில்
ஆசையாய் கற்பனையில் கட்டிடும்
கோட்டைக்கு கண்கவர் நுழைவுவயிலாய் 
இருப்பதும்கூட ஓர் ஓட்டையே (வாசல்) !

ஆயிரம் தேக்கின் உயர் மதிப்பினையும்
ஒன்றுமில்லை என்பதை போல
சற்று  தூக்கலாய்  தூக்கியே
காணுமெனை காண்கையில் போட்டுதாக்கிடும்
தூயவளே !
உன் அழகு மிகுந்தமூக்கின் அழகிற்கே
அழகு சேர்ப்பது அவ்விரு ஓட்டையே(துவாரம் ) 

முழுதாய் பார்த்திடினும் சரி, இல்லை
முழுமுழுதாய் பார்த்திடினும் சரியே
தான் அழுது வெளிப்படுத்தும் வளிக்கசிவால்
எத்தனையோ பேர்  மனம் கசிந்துடும் வலியினை
மனதூடே நுழைந்து,மருந்தேதுமின்றி
அழுது அழுது அழுதே பழுதுபார்த்திடும்
மூங்கிலின் ஊடேபுகுந்து  வெளிப்படும் காற்றது
உட்புகுந்து வெளிப்படும் வழியும் ஓட்டையே (துளை)

சூரியனின் சுடரும்  ஒளிவேட்கையது
குளிரும் இரவிலேனும் இப்புவிமீது
சற்றும் படாதிருக்க வேண்டியே
வானமது விரித்திருக்கும் அரும்,பெரும்,கரும்
குடையினில் லட்சக்கணக்கில் பரந்து,படர்ந்து
விழுந்திருப்பதும் பல்வகை ஓட்டையே (நட்சத்திரங்கள்)
Title: Re: ஓட்டை தம் மகத்துவங்கள் !!
Post by: ஆதி on January 21, 2013, 09:35:23 PM
வித்யாசமான கவிதை அஜித், தொடர்ந்து படையுங்கள், வாழ்த்துக்கள்.
Title: Re: ஓட்டை தம் மகத்துவங்கள் !!
Post by: aasaiajiith on January 22, 2013, 12:47:13 AM
வாழ்த்துக்கு.நன்றி!!!!