பன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_5FMVlm1Qe98%2FSpC51_J2oqI%2FAAAAAAAAABo%2FYAcu87V2xzE%2Fs320%2Fr1252939268.jpg&hash=74fe6cf0facf6b9d475616e71ea900097ad5b6bb)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_5FMVlm1Qe98%2FSpC51Tf_NLI%2FAAAAAAAAABg%2FcVAMtYVWOo0%2Fs320%2Fr961719106.jpg&hash=3b1ca9a870cc3c2a9f3420a1d4cddc2645450a5e)
மருத்துவர்.அ.உமர் பாருக்
பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ்... இப்போது பன்றிக் காய்ச்சல்! இப்படி ஒவ்வொருவிதமான பெயர் தாங்கிய நோய்களைப் பற்றி பீதியை கிளப்பு வதும், அதன் மூலம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு (றாடி) மற்றும் அரசாங்கங்களின் தெளிவற்ற நடவடிக்கைகள் மக்களை மேலும் பயமுறுத்துவதாக உள்ளது.
பன்றிக்காய்ச்சல் என்பது இன்று புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமல்ல. 1918ல் தோன்றிய ப்ளூ காய்ச்சலில் எச்1என்1 வைரஸின் சாயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1977ல் எச்1என்1, எச்3என்2 போன்ற வைரஸ் கள் காணப்பட்டன. அப்போதிருந்து இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வரு கின்றன. இன்னும் எவ்விதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது பரிந் துரைக்கப்படும் தமிஃப்ளூ மாத்திரை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படும் சோர்வு, தசைவலி, சளி, இருமல், வாந்தி அல்லது பேதி போன்றவற்றில் ஒன்றிரண்டை போக்கும் என்று கூறப்படுகிறதே தவிர அது குணப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ அல்ல. ஆனால் மருந்துக் கம்பெனிகள் தங் களுடைய சந்தையை துவங்கிவிட்டன. ஒரு தமிஃப்ளூ மாத்திரையின் விலை 300 ரூபாய். பீதியையும் தேவையையும் பொறுத்து இன்னும் விலை கூடினாலும் ஆச்சரியமில்லை
பன்றிக்காய்ச்சல் பற்றிய ஆய்வுகளின் முடிவுகளும், நடைமுறையும் குழப்பமானவையாக உள்ளன.
* வைரஸ் என்பது உலகிலேயே மிகவும் நுண்ணிய உயிர் என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. இது துணி, முகமூடி போன்றவற்றின் நுண்துளைகளை விடச் சிறியது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பிற்காக எந்தவித பயனுமற்ற முகமூடி களை சந்தையில் உலவவிட்டது யார்?
* பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் காற்றில் பரவுவதாகக் கூறப்படுகிறது. அப்படி காற்றில் அதி வேகமாகப் பரவும் வைரஸ் ஒரு குடும்பத்தில் ஒரு நபரை மட்டும் தாக்குகிறது. ஒரு ஊரில் 5, 10 பேர்களை மட்டும் தாக்கு கிறது. இன்னும், இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் சுகாதார வசதியற்றவர்களிடம் ஏன் பரவவில்லை? காய்ச்சல் பற்றிய பீதியும், மருந்து வியாபாரமும் மட்டுமே பரவுகிறது.
* அவ்வப்போது ஏற்படும் பறவைக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் கிருமிகள் எங்கிருந்து வருகின்றன என்பதும், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் எங்கு செல்கின்றன என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
* அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கைகளின்படி 2005ம் ஆண்டு முதல் 2009 பிப்ரவரி வரை பன்றிக்காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமே 12 பேர்தான்! நான்கு ஆண்டுகளில் இல்லாத புதிய வேகம் கிருமிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது புரியாத புதிர்தான்.
இப்போது கண்டறியப்பட்டுள்ள எச்1என்1 வைரசில் - வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய பன்றிகளின் மரபணுக்களும், பறவைகள் மற்றும் மனித மரபணுக்களும் இணைந்து காணப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.
மரபணு மாற்ற தொழில்நுட்ப ஆய்வுகளே எச்1என்1 வைரசின் தோற்றத்திற்கும், பெருக் கத்திற்கும் காரணம் என்று கூறுகிறார் தமிஃப்ளூ ஆய்வுக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஆஸ்ட்ரோ அட்ரியன் கிப்ஸ்.
இவ்வளவு ஆய்வுகளும் அதன் குழப்பங் களும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலானவை. மாற்று மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர் போன்ற மருத்துவங்களை அரசு எப்போதும் போல் இப்போதும் கண்டுகொள்வதில்லை.
காய்ச்சல் என்பது உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கூறுகளை உடலே வெளியேற் றும் முயற்சியாகும். உடலின் எதிர்ப்பு சக்திக் கும் - நோய்க்கூறுகளுக்குமான போராட்டம் தான் வெப்பமாக வெளிப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் என்பதும் நோய்க்கெதிரான உடலின் போராட்டம்தான். உடலிற்கு துணை செய்யும்படியான இயற்கையான சிகிச்சை முறைகளை அரசுகள் பரிந்துரைப்பதுதான் மக்களையும், பொருளாதாரத்தையும் காக்கும் ஒரே வழி! ரசாயனத் தடுப்பு மருந்துகளின் பின்னால் ஓடுவது பன்னாட்டுக்கம்பெனி களை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சீரழி விற்கும் வழிவகுக்கும்!