FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 17, 2013, 04:28:37 PM
-
மனதை கொல்லை கொண்டவள்,
வாழ்க்கைக்கு துணையாக வர இருந்தவள்
வாழ்வே அவள்தான் என்று என்ணிய போது
தனியாக தவிக்க விட்டு போய்விட்டாள்!
தாயிடம் அடம் செய்த குழந்தை
தாய்மடியே தேடுவது போல்
உன்னிடம் கோபம் கொண்ட நான்
உன் தோள்களே தேடுகிறேன்
சாய்ந்து கொள்ள....
எனக்குள் தான் பேசுகிறேன்
உனக்கு எப்படி கேட்கிறது
என் பேசுக்கு பதில் தரும் விதமாகவே
உன் செயல்கள் இருக்கின்றனவே
எது கேட்டாலும் சிரிப்பை மட்டும்
முன் கூட்டியே பதிலாக தருகிறாயே
உன் சிரிப்பை கண்டதும்
கேட்காமலே கூட கிடைத்து விட்டது
என்று நானும் ஒன்றும் கேட்பதில்லையே
என்னை ஒன்றும் கேட்க விடாமல்
தடுக்கும் வித்தையை
எங்கு கற்று கொண்டாய் ?
-
தாயிடம் அடம் செய்த குழந்தை
தாய்மடியே தேடுவது போல்
உன்னிடம் கோபம் கொண்ட நான்
உன் தோள்களே தேடுகிறேன்
சாய்ந்து கொள்ள....
என்னை ஒன்றும் கேட்க விடாமல்
தடுக்கும் வித்தையை
எங்கு கற்று கொண்டாய் ?
இதுதான் காதல் உன்மத்தம் ... காதளிபவர்களுக்கே உரிய உணர்வுகள் ... நன்று வருண்
-
thanks angel
-
Nallaa irukku varun
-
தாயிடம் அடம் செய்த குழந்தை
தாய்மடியே தேடுவது போல்
உன்னிடம் கோபம் கொண்ட நான்
உன் தோள்களே தேடுகிறேன்
சாய்ந்து கொள்ள....
arumayaana varigal nanba ....