FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on January 17, 2013, 01:55:58 PM

Title: ♥எனக்கு சந்தோஷமே ♥
Post by: ஸ்ருதி on January 17, 2013, 01:55:58 PM
உறவை வளர்த்திட ஒரு இடம்
பாசத்தை பகிர ஒரு இடம்
நட்பை கொடுத்து நட்பை பெற
ஒரு இடம்
பலரின் முகம் பாராமல்
உறவை தரும் ஒரு இடம்
இதயதளம்  ♥

பாசத்தை தர பல உறவுகள்
பாதகமாய் போகும் சில உறவுகள்

நட்பை தேடும் உறவுகள்
நஞ்சை விதைக்கும் சில உறவுகள்

அழுகையும் சிரிப்பையும்
பகிர்ந்து பழகி வருகிறோம்
அனுதினமும்

எல்லோருக்கும் நீ வெறும்
 இணையதளம் தான்
எனக்கு மட்டும் நட்பு பாராட்டும்
இதயதளம்

உன்னை தினமும்
படித்துவருகின்றேன்
உன்னில் வசித்து வருகின்றேன்
என் சந்தோஷத்தையும்
துக்கத்தையும் தாங்கி
முகம் மலர்ந்திருக்க
உன்னால் மட்டுமே முடியும்

அன்புக்கு அடிமையாய் இருந்தேன்
பலகாலம்
இன்று உனக்கு அடிமையாகி
நேரம் போவது அறியாமல்
கணினியில் உறைந்து போகின்றேன்

உயிர் இல்லையாம்
கணினியில்
நம்பிக்கையில்லை
என் பல உயிர்கள்
கணினியின் ஊடே
காத்திருக்க
முழுவதுமாய் உன்னில்
அடிமையாக இருப்பதும்
எனக்கு சந்தோஷமே ♥ ♥