FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on January 17, 2013, 01:38:15 PM
-
1.
கழண்டுவிழுந்து கொண்டிருக்கிறது
வக்கிரங்களை வன்மங்களை
வஞ்சகங்களை சூழ்ச்சிகளை
பொய்மைகளை போலிமைகளை
சுய இருட்டுக்களை
கேவலமான அந்தரங்கங்களை மறைத்திருக்கும்
அவளின் சுயநிந்தனைகளின் முகமூடிகள்
துல்லியமாய் தெரிய ஆரம்பித்திருக்கிறது
உடைந்த புண்ணினின்று வழியும்
சீழினும் அருவெறுப்பாய்
ஹீனமான அவளின் முகம்
-
2.
சுயக்கழிவிரக்களின்
அரிதாரங்களில்
சீழ்மை வழிய
கீழ்மை படர்ந்திருக்கும்
புழுநெளியும் குணங்களின்
சுயமை மறைத்திருத்தலை
அறிந்த தருணத்தில்
அடக்க முடியாத
குடல்குமட்டலை உண்டாக்குகிறது
ஹீனமான அவளின் முகம்
-
கழண்டுவிழுந்து கொண்டிருக்கிறது
வக்கிரங்களை வன்மங்களை
வஞ்சகங்களை சூழ்ச்சிகளை
பொய்மைகளை போலிமைகளை
சுய இருட்டுக்களை
கேவலமான அந்தரங்கங்களை மறைத்திருக்கும்
அவளின் சுயநிந்தனைகளின் முகமூடிகள்
துல்லியமாய் தெரிய ஆரம்பித்திருக்கிறது
உடைந்த புண்ணினின்று வழியும்
சீழினும் அருவெறுப்பாய்
ஹீனமான அவளின் முகம்
சுயக்கழிவிரக்களின்
அரிதாரங்களில்
சீழ்மை வழிய
கீழ்மை படர்ந்திருக்கும்
புழுநெளியும் குணங்களின்
சுயமை மறைத்திருத்தலை
அறிந்த தருணத்தில்
அடக்க முடியாத
குடல்குமட்டலை உண்டாக்குகிறது
ஹீனமான அவளின் முகம்
ஆம் முக மூடிகள் அகற்ற படும்போது அதுவரை பேணி வந்த உருவகித்து வந்த முகம் பொய் போலி என தெரிய வரும்போது ... நிச்சயமாய் அந்த அருவெறுப்பு தாங்க முடியாத ஒன்று .. உவமான உவமேயங்கள் அழகு ஆதி ... பொய்மைக்கு வஞ்சகங்களுக்கு சூழ்ச்சிக்கு ஏத்த உவமான உவமேயங்கள் ... வித்தியாசமான கவிதைகள் ... வாழ்த்துக்கள் ஆதி
-
ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க .....
nice linez....adhi....!!!