மருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinakaran.com%2FHealthnew%2FH_image%2Fht850.jpg&hash=837dcd4ea12c54fadb993313143c2485ed1aebf3)
*கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
*ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது கடுகு.
*தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
*விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
*தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.