கட்டிகளுக்கு வாகை வைத்தியம்(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinakaran.com%2FHealthnew%2FH_image%2Fht1063.jpg&hash=86679ae65a2b2ef91b66c9ab3619de1f96b25017)
*சில குழந்தைகளுக்கு அடிக்கடி கட்டிகள் வந்து தொல்லை கொடுக்கும். இதற்கு எளிதான கை வைத்தியம் உள்ளது.
*வாகை விதையை பொடி செய்து பாலில் கலந்து உட்கொண்டு வர நெறிக்கட்டிகள் மற்றும் நெறிக்கட்டிகளால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.
*வாகை மரம விதையை நீரில் உரைத்து பூசி வர, கண் கட்டிகள் கரையும். இதனையும் நெறிக்கட்டிகள் மீதும் பூசலாம். விரைவில் நல்ல குணம் பெறலாம்.
*வாகைப் பூவினை அரைத்துப் பற்றுப் போட்டு வர, கட்டிகள், தடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும்.
*மேலும், கட்டிகள் மீது மஞ்சள் வைத்து பற்றுப் போட்டு வர விரைவில் கட்டிகள் உடையும்.
*கண் இமைகளில் கட்டிகள் வந்தால், கை விரலை ஒன்றோடு ஒன்று தேய்த்து அதனால் ஏற்படும் சூட்டை உடனடியாக கண் இமைகள் மீது வைக்க விரைவில் கட்டி உடையும்.