FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on January 14, 2013, 02:57:37 PM

Title: ரசித்த கவிதைகள் - துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுகின்றன‌
Post by: ஆதி on January 14, 2013, 02:57:37 PM
 
 
 
இருக்கிறார்கள் ஆண்கள்
------------------------------
 
 
இருக்கிறார்கள் ஆண்கள்
அப்பாவாய்
அண்ணனாய்
தம்பியாய்
கணவனாய்
மாமனாய்
மகனாய்
இன்னும் பல உறவாய்
இருப்பதேயில்லை சகமனிதனாய்
 
- ஜெஃபி
 
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஆணுடன் பழக ஒரு உறவு தேவைப்படுகிறது, ஒரு ஆணுடன் ஒரு பெண் பேசுவதை கூட இந்த சமூகம் சந்தேக கண் கொண்டே காண்கிறது, அதுவே ஒரு பெண்ணுடன் ஒரு பெண் பேசினால் சகமனுசித்தானே என்று அமைதிக்காக்கும் சமூகம், ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசுவதைக் கண்டு முனுமுணுப்பதேன் என்று கேள்வி கேட்கிறார் ஜெஃபி
.



 
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ! SabriNa ! on January 14, 2013, 04:36:45 PM
evlo arthamaana varigal aadhi...arumaiya iruku...!!!

ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசுவதைக் கண்டு முனுமுணுப்பதேன் என்று கேள்வி கேட்கிறார் ஜெஃபி

idhu ellorum keka virumbum kelvi dhaan...!!
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 14, 2013, 06:55:40 PM
பின்னூட்டதுக்கு நன்றி ஷர்மி, இந்த கவிதையில் நான் புரிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன் அவ்வளவே

Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 14, 2013, 07:08:21 PM
ராமச்சந்திரனா என்று கேட்டேன் .
ராமச்சந்திரன் தான் என்றார் .
எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை .
அவரும் சொல்லவில்லை .

-நகுலன்

நவீன இலக்கியத்தின் முன்னோடிகளின் மிக முக்கியமான ஆளுமைகளில் நகுலனும் ஒருவர்

நகுலனின் கவிதைகள் பல அகவயமானவை

இந்த கவிதையின் அவர் ராமச்சந்திரன் எனும் பெயரை குறிப்பிடுகிறார், அந்த ராமச்சந்திரன் ஒரு பெயராக, ஒரு மனிதனாக, ஒரு புத்தகமாக, ஒரு பொருளாக, ஒரு அனுபவமாக, ஒரு வெற்றுத்தனிமையாக கூட இருக்கலாம்

நாம் பல கணங்களில் பலவற்றை இப்படித்தான் இனம் காணாமலே ஏற்றுக் கொள்கிறோம்

அது தன் உண்மை ரூபத்தை காட்டுகையிலேயே நமக்கு தெரியவரும் அது எதுவென‌

Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: Global Angel on January 14, 2013, 09:37:41 PM
ஆம் ராமச்சந்திரன் என்னும் பேர் வைத்து கொண்டால் மட்டும் ஸ்ரீ ராமனாகுவானா ? ...ஒரு வேளை  எந்த ராமன் என்று கேட்டிருந்தால் ... கெட்டவன் விழித்திருப்பான்
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 15, 2013, 01:15:06 AM
அட! இப்படி ஒரு கோணமும் இருக்கா ? நல்ல இருக்கு, நன்றிங்க‌
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 15, 2013, 12:51:27 PM
ஆலயத்துக்குள்ளிருக்கும்
அத்தனைபேர் முகங்கள் மேலும்
முகமூடிகள்!
பக்தன் ஆகவும் பக்தனாகவும்
பாவியாகவும் பாவியாகவும்
வள்ளல் ஆகவும் வள்ளலாகவும்
தேவியாகவும் சேடியாகவும்
அவரவர் தேவைக்காய்
முகமூடிகளை
அணிந்துகொண்டு....
***************************
உற்றுப் பார்த்தால்
அம்மன் கூட
மூக்குத்தியும் புன்னகையும்
முகமூடியாய்!!

ஒரு உந்துதலில்
என் முகமூடியைக் கழற்றிக்
கீழே போட்டேன்......
அம்மனின் முகமூடியும்
கீழே விழுந்து விட்ட து !!

-ஜான்

பல திசைகளில் விரிகிறது க‌விதை

அவிழ்ந்த முகமூடி அம்மன் அணிந்து கொண்டதல்ல நாம் அனுவித்தது

நாமும் முகமூடி அணிந்து அம்மனுக்கும் முகமூடியிட்டு, அந்த முகமே அம்மன் முகமென மனதை நம்ப வைத்து கொண்டு வாழ்கிறோம்

நம் முகமூடி கழல அம்மன் முகமூடி கழல்கிறது

சில நேரம் அம்மனின் முகமூடி கழண்டும் நம் முகமூடி கழட்டப்படாமலே இருக்க அல்லது அம்மனின் உண்மை முகத்தை பார்க்க விரும்பாமல் இருக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது

ஆடி போலத்தான் அம்மனும், அவள் முகம் பிரதிபளிப்பது அவளை அல்ல நம்மை

இந்த கவிதையில் வரும் அத்தனைபேர் எனும் வார்த்தை மற்றவரை குறிப்பதாக எடுத்து கொள்ளலாம் அல்லது நம்முடைய பல முகங்களை குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

நம் முகமென கொண்டால் எல்லா முகமூடிகளும் கழண்டுவிட்டதாகவே அர்த்தமாகிறது

Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: Global Angel on January 16, 2013, 04:28:27 AM
முகமூடிகள் இல்லையென்றால் கஷ்டம்யா .. அத தூக்கி மாட்டிடலாம் ... பலருக்கு முகமூடி பிரியமா இருக்கு ... அதுக்குள்ள என்ன இருக்கு எப்படிபட்ட முகம் இருக்குன்னது அவசியமற்றது ... ஏன் அது தெரிந்தால் நிமதியே போய்விடும் ... எனவே முகமூடி இருந்துட்டே போகட்டுமே ,,, :o
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 21, 2013, 09:42:58 PM
நன்றிங்க, உங்க சிந்தனையும் சரிதான் :D
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 21, 2013, 09:58:32 PM
வழி வழியாய் வரும் கதைகள்...
-----------------------------------

என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு எழுத்துக்கள்..

பாட்டி தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும் இதிகாசங்களும்

பாட்டியிடம் என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும் கட்டபொம்பனும்

என் தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும் திருவிளையாடலும்

என் மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க ராஜாவையும் சின்ட்ரெல்லாவையும்

தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா? ??? ..

-ஹேமா பாலாஜி

டெல்லியில் நிகழ்ந்த கொடுமையான நிகழ்வுக்கு பிறகு ஹேமாபாலஜியால் எழுதப்பட்ட கவிதை இது, மிக சாதாரணமான வார்த்தைகளால் சமூகத்தின் அதிமுக்கியமான பிரச்சனையை பெண்கள் நாளும் சந்திக்கும் இன்னலை எளிமையாய் அதே வேளையில் அழுத்தமாகவும், நுட்பமாகவும் சொல்லியிருக்கிறார்

வாசகன் கடைசி வரியை வாசிக்கும் போது உண்டாகிற பதட்டம் அளவில் அடங்காதது, அந்த வார்த்தைகள் வலி மிகுந்ததாகவும், நாளை சமூகம் எப்படி இருக்கும் என்னும் பேரச்சமும் பீதியும் கவலையும் நிறைந்ததாகவும் இருக்கிறது, குழந்தைக்கு சொல்லப்படும் கதைகளில் கூட வன்முறையும் வன்புணர்வும் இருக்குமாயின் அந்த சமூகம் எவ்வளவு குரூரம் நிறைந்ததாக மாறி போயிருக்கும்

குழந்தைக்கு சொல்லப்படும் கதைகள் நீதிகள் உடையதாக, நல்லதை போதிப்பதாக இருந்தது போய், விழிப்புணர்வையும், வக்கிரமான மனிதர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்ட தெரிநிலையையும் போதிப்பதாக இருக்கும் எனும் ஹேமாவின் கணிப்பில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை எனினும், அப்படி ஒரு நிலை எதிர்கால சந்ததிக்கு நிகழ்ந்துவிட கூடாதெனும் எண்ணம் மேலிடாமல் இல்லை

வக்கிர ஆண்களும், வக்கிர ஆண்களுக்கு குடை பிடிக்கிற பெண்களும் இருக்கிற வரை இந்த சமூகத்தின் நிலை இன்னும் அவலம் மிகுந்ததாக மாறும் என்பதை வருத்ததுடன் ஏற்றுக் கொள்ளவே வேண்டி இருக்கிறது
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 21, 2013, 10:44:23 PM
என் காதல் வேறு
------------------

இடைவிடாத துரத்தல்-
பின்தொடர்தல்-
எதிர்பாரா காத்திருத்தல்-
தொடர் அழைப்புகள்-
தூதனுப்புதல்

என இப்படி எதுவும் இல்லை
நம் காதலில்

இன்னும் கூட
நம்ப மறுக்கிறார்கள் நண்பர்கள்

ஆதாரம்-சாட்சிகள் காட்டி
உறுதிப்படுத்த
நம் காதலொன்றும் வழக்கன்று
வாழ்க்கையடி பெண்ணே!

சண்டைகள்-கோபதாபங்கள்
விலகி நிற்கும் வெறுப்பு
என
எல்லோருடையதையும் போன்றதுதான்
நம்முடையதும்

அதனாலென்ன?

உனக்கு முன் நான்
எனக்கு முன் நீ
என்ற போட்டியில்
நம்மிருவரின் ஒருசேர் மரணம்
சொல்லும் இந்த ஊருக்கு

எல்லோருடையதையும்
போன்றதன்று நம் காதல்!

ஆமாம்...
இருக்கையில் நம்புவதை விட
இறந்தபின் நம்புவதில்
இந்த உலகம் இன்னும் உன்னதம்!

‍- குதிரை

என் காதல் வேறு என்று உண்மையிலையே வேறுபட்ட காதலை எழுதியிருக்கிறார் குதிரை

இதில் அவர் சாதல் என்கிறார், எப்போது என்று சொல்லவில்லை, நான் வாழ்ந்து சாதல் என்று எடுத்துக் கொள்கிறேன்

இந்த கவிதையில் வாசகனுக்கான ஒரு வெளி இருக்கிறது

அதாவது வாசகன் தனக்காக எழுதி கொள்ளும் வரிகள் அந்த வெளியை நரப்பி என் கவிதையை நான் குதிரையிடம் இருந்து உருவாக்கிக் கொள்கிறேன்

இந்த வெளி குதிரைக்கு தெரிந்து நிர்மானிக்கப்பட்டதா, தெரியாமல் உள் நுழைந்ததா தெரியவில்லை
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 29, 2013, 02:24:42 PM

நான் ஆதி மனிதன்
-------------------------

நான் ஆதி மனிதன்
என்னை விட்டு விடுங்கள்
திரும்பிச் செல்கிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் நாகரிகங்களிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் குகைகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் கலாச்சாரங்களிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் காடுகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் சமத்துவமின்மைகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் மலைகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் மொழிகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் சைகைகளுக்கும் குறிகளுக்கும் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் ஆடைகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
நான் நிர்வாணத்துக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் சாத்தான்களின் உலகத்திலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் கடவுளிடம் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
என் காடுகளை எனக்குத் திருப்பித் தாருங்கள்
உங்கள் மொத்தத்தையும் திருப்பித் தருகிறேன்;
உங்கள் ஆயுதங்களையும்..

-அப்துல் காதர்

அப்துல் காதர் மிக நல்ல கவிஞர்,  எளிமையாக அதேவேளையில் மிக வலிமையாக கருத்துக்களை சொல்வதில் வல்லவர்

இந்த கவிதை பற்றி ஒரே வரியில் சொல்வதானால் "மறைக்க தெரியாத வரைக்கும் மனதும் எண்ணமும் சுத்தமாகவே இருந்தது

" என்று சொல்கிறார் கவிஞர்
Title: Re: நான் ரசித்த கவிதைகள்
Post by: ஆதி on January 29, 2013, 05:05:10 PM
மழைத்துளிகளை வேப்பம்பூக்களை
மண்புழுக்களை எண்ணினேன் என்றாள்
வழுக்கோடையின் தேளிமீன் எண்ணிக்கை சொன்னாள்
ஆலம்பூக்களையும் எண்ணிவிட்டாளாம்.

ஒரு சோளக்கொண்டையில் எத்தனை மக்காச்சோளம்
ஒரு வெள்ளரியில் எத்தனை விதைகள் என்று கூட.

நம்புவோம், ஒன்றும் நஷ்டமில்லை.
எத்தனை பேர்கள் வன்புணர்ந்தார்கள்
என்பதையும் அவள் சொல்லக்கூடும்.

பைத்தியக்காரியின் உளறலை எல்லாம்
எங்கேயாவது யாரும் பொருட்படுத்துவார்களா?

-கல்யாணி.சி

மிக அழுத்தமாக பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமையை பதிவு செய்கிறார் கல்யாண்ஜி, சித்த சூவாதீனமற்ற ஒரு பெண்ணை கூட இந்த வக்கிரம் பிடித்த ஆண் விலங்குகள் விடுவதில்லை என்பதனை அழுத்தமாக பதிவு செய்கிறார் கல்யாண்ஜி. வேட்டையாடப்பட வேண்டிய இந்த விலங்குகளை சமூகம் உதாசீனத்தால் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதனையும் தீர்க்கமாக பதிவு செய்திருக்கிறது இந்த கவிதை.
Title: Re: ரசித்த கவிதைகள் - பைத்தியக்காரியின் உளறலை
Post by: ஆதி on January 31, 2013, 08:03:17 PM
வீடு
------

இந்தத் தெருவில்
குரைப்பதற்கு நாய்கூட இல்லை.
வீடுகளின் குழந்தைகள்
ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
பெரியவர்கள்
முதியோர் இல்லத்தில்
இறப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்.
எறும்புகளைக் கூட‌
மருந்து வைத்துக் கொன்றுவிட்டோம்.
குப்பைகளைக் கூட‌
பக்கத்து வீட்டுப் புறக்கடைகளில்தான் கொட்டுகிறோம்.
கொசுக்களையும்
பூச்சிகளையும்
சுருள்வத்தியால் கொல்கிறோம்.
பல்லிகளைக் கொல்லவும்
வழிவகைகள் காண்போம்.
வாசலுக்குக் கான்கிரீட் போட்டுவிட்டால்
தவளைகள் இருக்காது.
காம்பவுண்ட் வால் கட்டிவிட்டால்
பாம்புகள் வராது.
மரங்களை வெட்டிவிட்டால்
பறவைகள் இருக்காது.
குயில் சத்தமும் இருக்காது.
எச்சமும் இருக்காது.
தங்கத்தை பேங்க் லாக்கரில்
வைத்திருப்பதால் திருடர்களும் வரமாட்டார்கள்.
மிச்சமிருக்கும் உணவை
வைப்பதற்கு ஃபிரிட்ஜ்
இருப்பதால் பிச்சைக்காரன் கூட‌
இங்கு வரமாட்டான்.
அருகில் இருப்பவனிடம்
எதற்குப் பேசுவது?
கைபேசி இருக்கிறது
தூரத்தில் உள்ள உறவோடு பேச.
ஏ.டி.எம்.மில் பணம் இருக்கிறது
செலவு செய்ய.
நாங்கள் அநேகமாக அலுவலகத்தில்
தான் இருக்கிறோம்.
வாடிக்கையாளரும், எஜமானும்
வெளிநாட்டில் இருக்கிறார்கள்.
தமிழில் பேசுவது அரிதுதான்
மம்மி மொழி போதும் நமக்கு.
வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது.
மனசும்தான்.
இந்த வீட்டில் டி.வி.மட்டுமே
பேசவும் பாடவும் செய்யும்.
இந்த வீட்டில்தான் கதவுகளை நன்கு சாத்தியபடி
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

-த.வாசுதேவன்

நாகரீகம், பொருளாதார முன்னேற்றம், இயந்திர வாழ்க்கையால் நாம் எவ்வளவை இழந்திருக்கிறோம், இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை பதிவு செய்யும் கவிதை
Title: Re: ரசித்த கவிதைகள் - வீடு
Post by: Global Angel on February 01, 2013, 04:42:34 AM
நியம்தான் ஆதி ... இப்போ போன் வந்தது தப்பா இல்லையா அதை சொல்லுங்க 
Title: துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுகின்றன‌
Post by: ஆதி on April 15, 2013, 03:39:33 PM
அவள் அறிந்திருக்கவில்லை
யாதொரு பெண்களிடத்தும்
கூறுவது போலத்தான்
அவன் தன்னையும் அழகியென்று
வர்ணித்தானென‌

அவள் அறிந்திருக்கவில்லை
பிறபெண்களிடத்தை போலவே
தன்னிடமும் மயக்க மொழி பேசினானெ

அவள் அறிந்திருக்கவில்லை
மற்றவர்களிடத்தை போலவே
தன்னிட்டமும் காதல் சொன்னானென‌

அவள் அறிந்திருக்கவில்லை
தன்னை போலவே
மற்றவர்களையும் மனையாளென‌
அழைத்தானென‌

அவள் அறிந்திருக்கவில்லை
இவ்வாறே பிறப்பெண்டீரிடமும்
சரசப்பேச்சுக்களை நிகழ்த்தினானென‌

அவள் அவனை நம்பினாள்
ஒரு மாசற்ற குழந்தையென‌

அவள் அவன் கைகளை பற்றிக் கொண்டாள்
அனாதரவான தருணத்தில் நீளும் கைகளென‌‌

அவள் ஒரு வளர்ப்பு பிராணியை போலவே
அவன் கட்டளைகளுக்கெல்லாம் இணங்கினாள்
இசைந்தாள், இயங்கினாள், குழைந்தாள், குலைந்தாள்

தன் இச்சையை மீதமின்றி
அவன் தீர்த்து கொண்டு
அவளை தவிர்க்க ஆரம்பித்த தருணத்தில்
உணர்ந்தாள் தான் ஏமாற்றப்பட்டதை
தான் வஞ்சிக்கப்பட்டை
தனுக்கு நிகழ்ந்த துரோகத்தை
நயவஞ்சகமாய் தான் வேட்டையாடப்பட்டதை
அவனின் வக்கிரத்தின் வடிகாளாய் தானாக்கப்பட்டதை

அவள் ஆற்றாமையில்
பொங்கினாள் வெடித்தாள் சினந்தாள்
தன் ஒட்டுமொத்த போர்குணத்தையும் திரட்டி
சமரிட்டாள்
சர்ச்சையை மேலழுப்பினாள்

நடுநிலை பொருந்திய பெருந்தன்மைமிக்க
அனைத்து கணவான்களும்
அவளின் காமத்தை குறித்து
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
சகமனுசிக்கு நிகழ்ந்த துரோகத்தை மறந்து
அவள் பலவீனத்தை விமர்சித்தார்கள்
அவள் தூண்டபட்டதை புறக்கணித்து
அவளை வெட்கம்கெட்டவள் என்றார்கள்
அவள் வேட்டையாடப்பட்டதை மறைத்து
அவளை வஞ்சகி என்று தூற்றினார்கள்
அவள் வஞ்சிக்கப்படதை தூர்த்து

அவள் மிரட்டப்பட்டாள்
வெறுக்கப்பட்டாள், விம‌ர்சிக்க‌ப‌ட்டாள்
விரட்டப்பட்டாள், அடக்கப்பட்டாள்

அவன் தன் துரோகங்கள் எல்லாம்
கண்டறியப்படவில்லை என்று நிம்மதி கொண்டான்
தன் வஞ்சகங்களெல்லாம் யாருமறியாமல்
மறைத்த சாதுர்யங்களையெண்ணி
பெருமிதம் கொண்டான்
அவன் தன் தூயப்பெயர் காப்பாற்றபட்டதை
நம்பிக் கொண்டான்
அவன் இன்னும் பல பெண்களை
தன் வக்கிரத்துக்கு பயன்படுத்த
வாய்ப்பிருப்பதை எண்ணி எக்களித்தான்
தன் களியாட்டங்கள் மேலும் தொடர‌
தன்னை நம்புவோரையெல்லாம் பயன்படுத்தி கொண்டான்

ஆனால்
அவன் அறிந்திருக்கவில்லை
அவன் தன் மனைவியால் வஞ்சிக்கப்பட்டதை
அவன் குழந்தைகள்
அவனுடையதில்லை என்பதை
அவன் தன் மனைவியை
நெருங்கும் சமயத்திலெல்லாம்
அவள் வேறொரு ஆடவனை நினைத்துக் கொள்வதை

அவன் அறிந்திருக்கவில்லை
துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுவதை
வஞ்சனைகள் வஞ்சகங்களால் ஈடு செய்யப்படுவதை
ஏமாற்றுதல்கள் ஏமாற்றுதல்களால் சமனாவதை

 
- ஜெஃபி

Title: Re: ரசித்த கவிதைகள் - துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுகின்றன‌
Post by: Global Angel on April 18, 2013, 07:01:20 PM

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பாடு குஷிதான் .. ஒருவரை ஏமாற்றிவிட்டோம் என இறுமாப்பு கொள்ளுபவர்கள் எமற்றபடுகிரார்கள் அப்டின்னு சொல்லி இருக்கீங்க மிக அருமையான கவிதை ஆதி .