சேமியா சர்க்கரைப் பொங்கல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinakaran.com%2Fsamayalnew%2FS_image%2Fsl1451.jpg&hash=2265d173031f655a073a8420d0f73aab86ade307)
என்னென்ன தேவை?
சிறிது நெய்யில் வறுத்த சேமியா - 1 கப்,
வறுத்த பாசிப்பருப்பு - அரை கப்,
வெல்லம் - ஒன்றரை கப்,
நெய் - அரை கப்,
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்,
பால் - அரை கப்,
பல், பல்லாகக் கீறி,
நெய்யில் வறுத்த தேங்காய் - சிறிது
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நெய்யில் பாதியைக் காய வைத்து, முந்திரி, திராட்சையை வறுத்து, 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் சேமியாவைச் சேர்த்து நன்கு வேக விடவும். வெல்லத்தைப் பொடித்து, அரை கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, சேமியாவில் சேர்க்கவும். அத்துடன் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு சேர்ந்து வரும்வரை மெதுவாகக் கிளறவும். கடைசியில் பால், ஏலக்காய் தூள், வறுத்த தேங்காய், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.