FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 13, 2013, 08:33:48 PM

Title: ~ வெண் பொங்கல் ~
Post by: MysteRy on January 13, 2013, 08:33:48 PM
வெண் பொங்கல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinakaran.com%2Fsamayalnew%2FS_image%2Fsl1463.jpg&hash=d5e6cd6ee79c6ae71b4999ec4f1e50e2f25cc9cc)

என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
உடைத்த மிளகு,
சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 100 கிராம்,
உடைத்த முந்திரி - 12, உப்பு- தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?
சுத்தம் செய்த பாசிப்பருப்பையும் அரிசியையும் ஒன்று சேர்த்து, இளம் சூடாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் 5 பங்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் அரிசி, பருப்பைச் சேர்க்கவும்.  உப்பு சேர்க்கவும். நன்கு வெந்து வரும்போது, நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம், முந்திரி, கறிவேப்பிலை வறுத்துச் சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது நெய் விடவும்.