FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 10, 2013, 11:28:18 AM

Title: ~ சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை ~
Post by: MysteRy on January 10, 2013, 11:28:18 AM
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F156458_460636517320016_604156563_n.jpg&hash=d5c9d0d182687d59104a51aedd343c01e995c6df)

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.