FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 09, 2013, 03:58:52 AM

Title: ஆயுளை கூட்டும் சிரிப்பு!
Post by: Global Angel on January 09, 2013, 03:58:52 AM
ஆயுளை கூட்டும் சிரிப்பு!


எப்போதும் புன்னகையுடன் இருப்பவர்களுக்கு ஆயுள் கெட்டி என்கிறது புதிய ஆய்வு. ஆமாம்! சிரிப்பு ஆயுளில் 7 ஆண்டுகளை கூட்டுகிறதாம்.

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சிரிப்பு பற்றிய ஆய்வை நடத்தியது. சிரிப்பதை ஒரு கடமைபோல எண்ணி, குறைவாக சிரித்து வாழ்ந்தவர்கள் சராசரியாக 75 வயது வரை வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. பளிச்சிடும் புன்னகையுடன் மனம்விட்டு சிரித்து வாழ்ந்தவர்கள் சராசரியாக 80 வயது வரை வாழ்கிறார்கள்.

சிரிக்க மனமின்றி வாழ்ந்தவர்கள் 72 வயதுக்குள்ளாகவே வாழ்வை இழக் கிறார்கள். மலர்ந்த சிரிப்பானது ஆயுளை 7 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அசட்டு சிரிப்பு சிரிப்பவர்கள்தான் ஆரோக்கிய வாழ்வுக்கு சொந்தக்காரர்கள் என்கிறது இந்த ஆய்வு. புன்னகை செய்வது இதய வியாதிகள் ஏற்படுவதை தடுக்கவும், குறைக்கவும் செய்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!