FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on September 25, 2011, 12:03:05 PM
-
ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை,மனஅழுத்தம் என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில எளிமையான வழிமுறைகள்
வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வர கருவளையம் நீங்கும் அல்லது வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் படி படியாக மறையும்.
உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் மறையும். தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.
தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் படி படியாக மறையும்.
வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். தினமும் இரு முறை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் படி படியாக மறைவதை பார்க்கலாம்.
சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது மிக அவசியம்.
-
சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது மிக அவசியம்.
enakkum vara pothu :'(
-
Enaku already vanthachu di Rose....kevalama iruku :( :'(
-
ilina matum ;) ;) ;) ;) ;) ;) ;D ;D ;D