FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on January 08, 2013, 02:52:11 PM

Title: இந்த முழுநிலவு
Post by: ஆதி on January 08, 2013, 02:52:11 PM
நிரம்பி ததும்பி வழியும்
இந்த முழுநிலவு
பார்வையற்ற‌
வெளியேற்றப்பட்ட‌
துரத்தப்பட்ட‌
தோல்வியுற்ற‌
நம்பிக்கையிழந்த‌
பிரியங்கள் மறுக்கப்பட்ட‌
அனாதரவான‌
ஒருவன் அல்லது ஒருத்தியின்
இருட்டுக்கு
எந்த வெளிச்சத்தையும் தருவதில்லை
Title: Re: இந்த முழுநிலவு
Post by: Global Angel on January 09, 2013, 03:14:38 AM
உண்மைதான் ... வெறுமைகள் நிறைந்திருக்கும் போது அழகிய பௌர்னமி நிலவுகள் கூட அழகாய் தெரிவதில்லை அந்த மனதுக்கு ... நல்ல தனிமையை உணர்த்தும்  ... கவிதை வரிகள் நன்று ஆதி
Title: Re: இந்த முழுநிலவு
Post by: vimal on January 15, 2013, 12:07:06 PM
unmaithan aadhi thanimaigalai suvaasippavanuku kadaikodiyil thaan mattume nirpadhu polave thonrum....arumayaan kavithan nanba :)