FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on January 08, 2013, 12:55:16 PM

Title: உனதின்மை
Post by: ஆதி on January 08, 2013, 12:55:16 PM
ஒழுங்கற்று சிதறிகிடக்கும்
இந்த வீட்டின் பொருட்களை
சீர்ப்படுத்த‌ தேவைப்படும்
ஒரு நாள்

பயனின்மைகளின் தூசி படிந்திருக்கும்
சமயலறை பாத்திரங்களை
துலக்கி போட வேண்டும்

மூலைநாற்காளியில் குவிந்திருக்கும்
துவைத்து போட்ட துணிகளை
மடித்து வைக்க வேண்டும்

சுருங்கிக்கிடக்கும் இந்த
படுக்கைவிரிப்பை சரிசெய்ய‌
உத்தேசித்து உத்தேசித்து
மறந்து கொண்டே இருக்கிறேன்

இலைநாவு உலர்ந்த தோட்ட‌
செடிகளுக்கு தண்ணீரூற்ற வேண்டும்

என‌து குப்பைக‌ள் நிர‌ம்பி வ‌ழியும்
கூடையை காலி செய்ய‌ வேண்டும்

ப‌றாம‌ரிப்பின்றி இருக்கிறது
இந்த‌ வீட்டின் ஒன்றொன்றும்
அவ்வனைத்திலும் நீட்டி படர்ந்து
உறுத்தி கொண்டே இருக்கிறது
உனதின்மை
Title: Re: உனதின்மை
Post by: Global Angel on January 09, 2013, 03:16:48 AM
Quote
ப‌றாம‌ரிப்பின்றி இருக்கிறது
இந்த‌ வீட்டின் ஒன்றொன்றும்
அவ்வனைத்திலும் நீட்டி படர்ந்து
உறுத்தி கொண்டே இருக்கிறது
உனதின்மை


மொத்ததுல .. வேலைக்காரிதான் ... இதெல்லாம் பண்ண ஆள் இல்லைனுதான் கவலையே தவிர ... மனைவின்னு அன்பு பாசம் இல்லைபா .. பாவம் பொண்டாட்டி