FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 07, 2013, 07:54:26 PM

Title: நிசப்தமே ! அருள் (வரம்) தருவாயா??
Post by: aasaiajiith on January 07, 2013, 07:54:26 PM
சப்தமாய் சப்தமிட்டு வந்த
சப்தங்கள் கூட
நின் நினைவினில், பித்துபிடித்து
திரியும் இப்பித்தனைபோல
பெ(பொ)ண் வரமாய் உனை வேண்டி
நிசப்தத் தவத்தினில் ......

**********************************************************

எத்தனையெத்தனை வரிகள்வரைந்தும்
கவிகளை படித்தும்,படைத்தும்,பதித்தும்
சிறிதளவும் ,இடம்பெற முடியவில்லை
நீ மட்டுமெப்படி ???

ஒன்றுமே புரியமால் , அமைதியாயிருந்தே
சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றாய்
என்னவளின் இதயத்தில் ......

**********************************************************
மௌனக்காடு

மயானத்தின் அமைதி

சப்தத்தின் சமாதி

ஆளரவமில்லா பகுதியின் எச்சம்

மௌனக்குவியல்தம் மிகுதியின் மிச்சம்

ஊமைகளின் நாட்டின் தேசிய கீதம்

சடலங்களுக்காக இசைக்கப்படும் சங்கீதம்

இப்படி, எப்படியெல்லாம் முடியுமோ
அப்படியெல்லாம் உனை அசிங்கப்படுத்தியும்
அழகியவள், அழகு மனதினில்
அழகாய் , ஆழமாய் ,இடம்பிடித்திருப்பதால்
நிசப்தமே !
இன்றுமுதல்,என்னவளின் மனதோடு
உனக்கும் நான் அடிமை ...!

*******************************************************************

பகல்பொழுது முழுவதும் - தொடர்
வேலைபளூவினில் மூழ்கிடுவதால்
பொழுதது புலர்ந்ததும் ,உனை போல்
தியானமாய் அமர்கின்றேன் , யோகாசனத்தில்
அமர்ந்த முதல்நிமிட முடிவிற்குள்
என்னவளின் நினைவுச்சங்கீதம் துவங்கிடுதே
என் செய்ய ??

பகல்முயற்சியது பழுதானதால் ,புத்துணர்வுடன்
இரவினில் மீண்டும் முயன்றிட
இமைக்கதவுகளை தாழிட்டுக்கொண்டுவிட்டால்
நிசப்தமது நிச்சயமே அசைக்கமுடியா நம்பிக்கையில்
இனிதாக ஓர் வழியாய், தூக்கமும் வந்தது
இலவச இணைப்பாய், அவளை சுமந்த கனவோடு
இமைக்கதவுகளுக்கு தாழிட்டவன் , இருக்கும்
ஒற்றை இதயத்திற்கு கதைவிட மறந்துவிட்டேன்
இளைப்பாற அவளுக்காய் இருக்கட்டுமே என .

நிசப்தமே !

நீயே பிரசித்திபெற்றவனாய் இருந்துவிட்டுப்போ
உன்னோடு அரியணை தகராறிட
எனக்கு திறனிருந்தும் தருணமில்லை ..~

*********************************************************************
அதுசரி , உனக்கும் அவளுக்கும்தான்
அமாவாசைக்கும் அப்துல்கலாமுக்குமான
நெருக்கத்தொடர்பயிற்றே ??
இருந்தும் எப்படி ? நீயென்றால் அவளுக்கு
இத்தனை பிரியம் ??
ஓ, இல்லாதவொன்றில் ஈர்க்கப்படுவதென்பது
இன்றுநேற்றல்ல , தொன்றுதொட்டே
இயல்பென்பதாலோ ??

*********************************************************************
நிசப்தமே !

உன்னிடம் ஒரு கோரிக்கை ! நிவர்த்துவாயா ?
எப்படி கொள்ளை கொண்டாய் என்னவளின் மனதை ?
தெள்ளத்தெளிவாய் இல்லாவிட்டாலும்
நீரினில் விட்டேடுத்த பத்துவிரல்களின்
தெளிப்பை போல , தெளிவாயாவது
தெரிவிப்பாயா சூட்சுமத்தை ??

நாளில் ஒருமணி நேரமேனும் பாடம் நடத்துவாயா ?
குருவாய் கருதி கோருகிறேன் !
அருள் தருவாய் எனும் அசைக்கமுடியா நம்பிக்கையில் !!