FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on September 24, 2011, 07:49:21 PM

Title: புதிய வாக்கியங்கள்...
Post by: JS on September 24, 2011, 07:49:21 PM
ஒரு கவிதை எழுத
பல வரிகள் தேடினாலும்
நீ பேசும் மொழிக்கு
ஈடாவதில்லை என் கவிதை...

சில வாக்கியங்கள்
என் மனதில் பதிய
புதிய வாக்கியங்கள்
உன்னால் தோன்றியதே...

முகம் வாடும் மலராய்
நான் இருக்க
பிறை சூடும் நிலவாய்
நீ வருவாய்...

சிறகுகள் இருந்தும்
பறக்கவில்லை நான்
உனக்காக உலகை
அடைந்தேன்
சிறு துளியாக...
Title: Re: புதிய வாக்கியங்கள்...
Post by: Global Angel on September 24, 2011, 08:34:27 PM
[/color]
Quote
முகம் வாடும் மலராய்
நான் இருக்க
பிறை சூடும் நிலவாய்
நீ வருவாய்...
nice  ;)
Title: Re: புதிய வாக்கியங்கள்...
Post by: ஸ்ருதி on September 25, 2011, 02:59:00 PM

சில வாக்கியங்கள்
என் மனதில் பதிய
புதிய வாக்கியங்கள்
உன்னால் தோன்றியதே...


உனக்காக எழுதும் வரிகள்
எல்லாம் கவிதையாகவே
தெரியும் மாயம் என்ன


நல்ல கவிதை JS sis