FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 04, 2013, 04:27:19 AM
-
சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.
இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சை முறை: சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.