FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on January 04, 2013, 02:34:10 AM

Title: பாட்டன் முப்பாட்டனெல்லாம் கல்லை வெட்டி கோவில் எழுப்பி வைச்சுட்டுப்போன... காரண(ங்
Post by: Global Angel on January 04, 2013, 02:34:10 AM
பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F429479_457876364270327_815676332_n.jpg&hash=0159ffa821c26d1659973d31ba3e332d47552040)

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம்.


என்ன காரணம்?
தேடிப் பார்ப்போம் வாருங்கள்.


கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியி னை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.

(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமா க கொட்டினார்கள். காரணத்தை தேடிப் போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவுதானா, இல்லை, பனி ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்க ள்.

காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி ஆராய்ந்தார்கள்!.

அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதை க்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியோ அதுதான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப்பொறுத்தது .
அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படு வார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பா ற்றப்படுவார் கள்!!!!.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலா புறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக் கொண்டு நிற் கிறது!!!

இது ஒரு தோராயமான கணக்குதான், இதை எல்லாம் பார்க்க போனால்

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”
என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது......