FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Global Angel on January 03, 2013, 11:07:11 PM

Title: புதிய பாட்நெட் வைரஸ்
Post by: Global Angel on January 03, 2013, 11:07:11 PM
நெட்விட்னஸ் என்னும் இன்டர்நெட் ஆய்வு நிறுவனம் புதிய வைரஸ் ஒன்று வேகமாக நிறுவனங்கள் மற்றும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. “நீபர் பாட்நெட்“ என அழைக்கப்படும் இந்த வைரஸ் இந்த குறிப்பை எழுதும் நாள் வரை 2,500 நிறுவனங்களின் 75,000 கம்ப்யூட்டர்களிலும், சில சோஷியல் நெட்வொர்க் தளங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்களின் கம்ப்யூட்டர்களிலும் பரவி உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வைரஸ் தான் பற்றிக் கொண்டுள்ள கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம் உட்பட அனைத்து பெர்சனல் தகவல்களையும் திருடி, இதனைத் தயாரித்து அனுப்பிய ஹேக்கர்களின் கம்ப்யூட்டர் களுக்கு அனுப்பும். பாட்நெட் என்பது இந்த வைரஸ் பரவி உள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கினைக் குறிப்பிடுகிறது. இந்த நெட்வொர்க்கை ஹேக்கர்கள் தள்ளி உள்ள ஓர் இடத்தில் தங்களின் மையக் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
இந்த வைரஸ் பரவி வருவது வழக்கமான ஒரு சோதனையின் போது நெட்விட்னஸ் நிறுவனத்தால் கண்டறியப்பட்டது. வழக்கமான மால்வேர் பாதுகாப்பு வழிமுறைகள், சிக்னேச்சர் வரிகள் அடிப்படையிலான கண்டறிதல் ஆகியவை இந்த வைரஸிடம் செல்லுபடியாகாமல், கண்டறியமுடியாமல் உள்ளன.