FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Global Angel on January 03, 2013, 11:03:27 PM
-
யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் 1Click YouTube Batch Downloader. இதனை http://eurekr.com /index.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட யு–ட்யூப் வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம். அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.