FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on September 21, 2011, 02:44:41 PM

Title: மனிதம் மறைத்த மரணங்கள்....!
Post by: Yousuf on September 21, 2011, 02:44:41 PM
குருதியின் நிறம் கூட அறியாதவர்களின்
சடலங்கள் குவியலாய்.,
காஃபா-  புண்ணிய பூமி.., வல்லோன் சொன்னது
காஸா - புண்படுத்தப்பட்ட பூமியோ.. யார் செல்வது?

அந்த சகோரங்களுக்கும் சேர்த்தே நமது "துஆ" இருக்கட்டும்
ஓடித்திரிந்த சாலைகள்
உறவுகளுடன் கூடி மகிழ்ந்த இல்லங்கள்
தொழுது தியானித்த மசூதிகள்
இவை மட்டுமா ?

இன்னோரன்ன எத்தனையோ...
இழந்து நிற்கின்றோம் பேதைகளாக
உடமைகளை மட்டும் அல்ல
உரிமைகளையும் தான்!

உயிரின் பெறுமதி உணரப்பட வில்லை
அது காரணமே இன்றி பறிக்கபடுகிறது
யூதனின் துப்பாக்கி முனையாலே ...
எம்மவரின் குருதியில் மட்டும் ஏனோ
இனம் தேடபடுகிறது

நிரை நிரையாக பேரீச்சை மரங்கள் ,
மனதை கவரும் பூஞ்சோலைகள்
ஆயினும் அம்மலர்கள் கூட
மணம் வீச மறுக்கின்றன
பலஸ்தீனியன் புதையுண்ட மண்ணில்
அது முளை கொண்டமயலோ ?

இது நாம் சுரண்டிய பூமி அல்ல
எமக்கே உரித்தான பூமி
எமது புனித பூமி
விடியலுக்காக காத்திருக்கின்றோம்
எம் இறைவனிடம் கை ஏந்தி !!!
Title: Re: மனிதம் மறைத்த மரணங்கள்....!
Post by: Global Angel on September 21, 2011, 06:52:00 PM
nalla kavithai :)
Title: Re: மனிதம் மறைத்த மரணங்கள்....!
Post by: Yousuf on September 21, 2011, 08:13:49 PM
Nandri...!
Title: Re: மனிதம் மறைத்த மரணங்கள்....!
Post by: ஸ்ருதி on September 25, 2011, 03:05:09 PM
nice one....
Title: Re: மனிதம் மறைத்த மரணங்கள்....!
Post by: Arya on September 27, 2011, 10:05:24 AM
Nala venduthal matchi nadantha nalarukum aanal.....
Title: Re: மனிதம் மறைத்த மரணங்கள்....!
Post by: Yousuf on September 27, 2011, 10:37:45 AM
Nichayam nadakkum arya machi athu thaan irai nambikkai...!