FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 02, 2013, 01:48:31 AM

Title: குளிர் காலத்திற்கான நைட் க்ரீம்கள்
Post by: Global Angel on January 02, 2013, 01:48:31 AM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsenthilvayal.files.wordpress.com%2F2012%2F12%2Fimage_thumb53.png%3Fw%3D590%26amp%3Bh%3D484&hash=e438500eaf08f0caeab43438bae6e3155367b8b8)

ஒவ்வொரு பெண்ணும் தன் சருமம் நன்கு பொலிவோடு, மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதிலும் குளிர்காலத்தில் தான் இந்த விருப்பத்திற்கு எதிர்மாறாக சருமம் வறட்சியடைவது, வெடிப்பு ஏற்படுவது என்றெல்லாம் ஏற்படும். எனவே அத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு நைட் க்ரீம் பெரிதும் உதவுகிறது.
ஏனெனில் இந்த நைட் க்ரீமானது இரவில் படுக்கும் முன் தடவி தூங்குவதால், க்ரீமில் உள்ள சத்துக்கள் அனைத்தும் சருமத்தில் நுழைந்து, சருமத்தை வறட்சியின்றி பொலிவாக்குகின்றன.
இந்த நைட் க்ரீமை வீட்டில் செய்வதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களான ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர், வினிகர் இவைகளை கொண்டு தயாரிக்கலாம். ஏனொனில் இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் நைட் க்ரீம்கள் எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
• இரவு நேரத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு இந்த வகையான நைட் க்ரீம் சிறந்ததாக இருக்கும். இந்த க்ரீம் செய்வதற்கு பாதாம் எண்ணெய் முக்கியமானது. ஏனெனில் அவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக நிறைந்துள்ளது.
இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. சொல்லப்போனால் சருமத்திற்கு அழகைக் கொடுக்கும் சத்து என்றால் அது வைட்டமின் ஈ தான். எனவே 3 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் லெனோலின் சேர்த்து கலந்து, அவற்றை சூடேற்றி, பின் குளிர வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி, சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
•  ஆப்பிள் சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவும். அத்தகைய ஆப்பிளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் க்ரீமானது, சென்சிடிவ் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதற்கு ஆப்பிளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் போது சருமத்திற்கு தடவி படுக்க வேண்டும். இதனால் சருமம் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும்.