FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on January 01, 2013, 09:10:39 PM
-
தவிர்க்க முடியாத
பல பொழுதுகளை
களவாடி செல்லும்
உன் நினைவு விம்பங்களுக்கு
உருவம் கொடுத்து பார்க்கின்றேன் ..
ஓவொன்றும் என்னுள் உடைகின்றன ...
என்னை சூழ்ந்திருக்கும்
இந்த அமானுஷ்யத்திலும்
அருவமாய் உன் உருவமே தெரிகிறது
கண் மூடி துயில நினைக்கிறேன்
இணையும் இமைகளின் ஊடே
உள் நுழைந்து உருவம் கொள்கிறாய் கனவாக ..
அணு அணுவாய் இம்சித்து
அனைத்தையும்
உன் வசப்படுத்த
உன் நினைவு கரங்களின்
ஆத்தம பிடிப்பில்
அடங்கி அமிழ்கிறேன் ..
ஏக்கமாய் ஒரு வார்த்தை
என்னில் இருந்து பிறக்க
உன்னில் இருந்து
கணமும் தயக்கமிண்டி பிறந்தது
அது நான்தானா ...?
உடைந்து சிதறிய
கண்ணாடி கோப்பை என
பரவி தெறித்தது இதயம் ..
பரிதாபம் ..
சிதறிய ஒவொரு துண்டிலும்
தெரிந்தாய் விம்பமாக...
நெருஞ்சியாய் வார்த்தைகள்
நெஞ்சை தைப்பதை அறிதும்
சிதறிய துகள்களில்
உன்னை பார்க்க தவறவில்லை இதயம்
-
angel kavithaila unna adichuka mudiyuma kalakuringa remba arumaiya irruku
-
thans thavi .. adichuka mudizaathunu ethuvum illai ... niraza eluthanum thavi athu en aasai ... vaira muthi pola aagidaalamnu iruken enna ninaikurenga ;D ;D
-
angel...azhaga ezhudhi iruka di !!!
-
thanksdi ;)