FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on December 31, 2012, 01:52:36 AM

Title: வாஸ்து கோளாறால் வந்த விபரீதம்!
Post by: Global Angel on December 31, 2012, 01:52:36 AM

மனிதர்கள் தவறு செய்வதில்லை. அந்தத் திறன் மனிதர்களாகிய நமக்கு கிடையாது. நாம் வசிக்கிற வீடுதான் நம்மை தவறு செய்யத் தூண்டுகிறது. திறமைகளை கூராக்குகிறது அல்லது மழுங்கடிக்கிறது.

பஞ்சபூதங்களின் விளையாட்டுக் களமாக இருப்பது வீடுதான். குடிசை, மாளிகை, பிளாட்பாரம் என மனிதனின் வாழ்விடம் எதுவாக இருந்தாலும், அவன் வாழுமிடத்தின் புறச்சூழல்தான் விதியின் பாதையில் அவனையும் அவனது குடும்பத்தையும் அழைத்துச் செல்கிறது.

சொந்தவீடோ, வாடகை வீடோ தாங்கள் வசிக்கும் வீட்டின் ஸ்திதியை அதாவது நிலையை அறியாதவர்கள் தங்களையே அறியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

ஒருவர் வாஸ்து சாஸ்திரத்திற்கு ஆதரவாக வாதிக்கலாம். மற்றவர் வாஸ்துக்கு எதிராக ஆதாரங்களை முன் வைத்து அவரை வீழ்த்தலாம். இவர்களின் நீயா நானா- யுத்தமானது பொருளற்றது.

செய்தித்தாள் ஒன்றில் கொட்டாவி விட்டவர் மீண்டும் வாயை மூட முடியாமல் மயங்கி விழுந்த சம்பவத்தை படிக்க நேர்ந்தது. நாலரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது வாயை மூட வைத்த மருத்துவர்கள் கூறிய கருத்து என்னவென்றால், தாடை திடீரென செயலிழந்து விட்டதால் வாயை மூட இயலாமல் ஆகிவிட்டது. இது போன்ற சூழ்நிலையில் கன்னத்தை ஒரு பக்கமாக தரையில் வைத்துப் படுத்துக்கொள்ள வேண்டும். புவி ஈர்ப்பு விசையானது தனது ஈர்ப்பு விசையால் தாடையை இயங்கச் செய்துவிடும் என்பதாகும். இந்த புவி ஈர்ப்பு விசையின் பெயர்தான் வாஸ்து!
இந்த வாஸ்துவுக்கு உயிர்கொடுப்பவர் சூரியன்!

புவி ஈர்ப்பு விசையின் காரணமாக பூமிக் கோளத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வீடுகள். சூரிய ஒளியைப் பெற முடியாமல் போனால் கொட்டாவி விட்டவரின் தாடையை போன்று செயலிழந்து விடுகின்றன. வேண்டாதவைகள் உள்ளே நுழைந்து விடுவதால் விபரீதங்கள் ஏற்படுகின்றன. இப்படி ஒரு வீட்டை பெங்களுர் மல்லேசுவரத்தில் பார்க்க நேர்ந்தது.

அது கிழக்குப் பார்த்த வீடு என்றாலும், கிழக்கு எல்லை வரை கட்டப்பட்ட வீடு. வடக்கில் ஜன்னல்கள் இல்லை. ஏனென்றால், பக்கத்து வீட்டின் சுவரும் இவர்களது சுவரும் ஒன்றே. அதாவது, பொதுச் சுவர். வீட்டின் உரிமையாளருக்கு நான்கு பெண்கள், ஒரு பையன். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது.

பையனுக்கு திருமணமாகி ஆறு மாதமான நிலையில், மருமகளின் வற்புறுத்தலால் தனிக் குடித்தனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த ஆறாவது மாதத்தில் ஒரு பெண் மகவு பிறக்க, குடும்பத்தினர் பூரிக்க, தாய்வீட்டுக்குப் போன மருமகள் மூன்று மாதம் கழித்தும் வருவதாக தெரியவில்லை. ஒரு வழியாக கெஞ்சிக் கூத்தாடி அவளை அழைத்து வந்தால், வந்த இரண்டாம் நாளே விஷம் குடித்து விட்டாள். போலீசார் வந்து மணமகன் குடும்பத்தை அரசுமரியாதையுடன் அழைத்துச் சென்று உள்ளே தள்ளிவிட்டனர்.

உள்ளுர் மகளிர் அமைப்புகள் மருமகளுக்கு ஆதரவாக பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுக்க. எல்லா பத்திரிகைகளிலும் மாமியார் என்ற உருவில் மாபாதகி என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின.

பதினைந்து நாள் ரிமாண்டில் இருந்துவிட்டு வெளியே வந்த மணமகனின் குடும்பம் கூண்டோடு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படது. வழக்கு, கோர்ட்டில் தீவிரமாக விசாரணையில் இருந்த வேளையில் மணமகன் வீட்டாரின் அழைப்புக்கிணங்க அவர்களது வீட்டுக்குப் போயிருந்தேன்.