FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on December 29, 2012, 01:16:34 PM
-
துணையாய் நிற்ப்பேன்
உனை தாங்க தூணாய் இருப்பேன்!
துளையிட்டால் என் மனதை
காதல் ஈட்டியால்!
துளையுண்ட என் மனதில்
துணையென எண்ணி மானாய்
துள்ளித்திறிந்தேன், துளையில்
உன் நினைவுகளையே தூவினேன்!
உன் நினைவோ இறுகிவிட
என் மனதோ இளகிவிட
உன் உருவம் பதிந்துவிட
என்னுள் எனதாகிவிட்டாய் பெண்ணே!
கவிதைகளாய் தோன்றினாய்
எழுதவில்லை நான்
எழுத்தால் கூட உனை
பிரிய மனமில்லை!
மனதை மயக்கிய மங்கையவள்
மாயமாய் மறைந்துவிட்டால்
பனிக்கட்டியாய் உறைந்துவிட்டேன்
அவள் பிரிவால் உடைந்துவிட்டேன்!
மானாய் திரிந்தேன், இன்று
மவுனத்தை சுமந்தேன்
என் சிரிப்பு மத்தாப்பும்
கண்ணீரால் நமத்துவிட்டது!
தனிமையில் இளகிய என்
இதயம், இரும்பாய் கணத்து
வெடித்த இலவம் பிஞ்சாய்
நைந்து காற்றில் பறந்தது!
இருட்டறையில் இடப்பட்டவனாய்
இன்பத்தை தொலைத்து, உன்
தனிமையின் தவிப்பால், என்
வாழ்வே வெருமையாகியது!
தனிமை என் வாழ்வின் வெறுமை!!!
-
nanba remba arumaiyana kavithaida remba naalku piraku thanthu irrukada ;D
-
தனிமைகள் தூவும் விதைகள் வெறுமைகள்தான் ..அதில் விரக்திகள் விஸ்வரூப வளர்ச்சி காணமல் பார்ப்பது நம்மது முயற்சியில்தான் உண்டு .. விமல் அழகான கவிதை ... காதல் சோக கவிதை நன்று
-
நன்றி நண்பர்களே தங்கள் முன்னுட்டத்திர்க்கு....... :)