முள்ளங்கி சூப்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinakaran.com%2Fsamayalnew%2FS_image%2Fsl461.jpg&hash=220dfd5dd39705d80acd7569facd078cd5de1d19)
சிவப்பு முள்ளங்கி - 2
பார்லி அரிசி - 100 கிராம்
பச்சைப் பட்டாணி - சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
காரட் - 1
பால் - 100 மில்லி
காலிபிளவர் - சிறிதளவு
பார்லியுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து முக்கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும்.பின்னர் முள்ளங்கி, காலிபிளவர், காரட் ஆகியவற்றை நறுக்கி பார்லியுடன் சேர்த்து மீண்டும்
வேக வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து மிளகுத் தூள், உப்பு கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைக்க வேண்டும்.