நீல்கிரி குருமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinakaran.com%2Fsamayalnew%2FS_image%2Fsl1325.jpg&hash=26b3f778aa7755d72bd58d8416f09b3e61c014ec)
என்னென்ன தேவை?
ஃபிரெஷ்ஷான காய்கறிக் கலவை
(பச்சை பட்டாணி, கேரட்,
பீன்ஸ், கோஸ், காலிஃபிளவர்,
உருளைக் கிழங்கு எல்லாம் சேர்த்து, ஒரே அளவில் நறுக்கியது) - 2 பெரிய கப்,
வெங்காயம், தக்காளி - தலா 2,
கசகசா, சோம்பு - தலா 1 டீஸ்பூன்,
பட்டை - 1 துண்டு,
காய்ந்த மிளகாய் - 3,
பச்சை மிளகாய் - 3,
முந்திரி - 8,
தேங்காய் பால் - 1 கப்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 6 பல்,
எண்ணெய் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - 1 கைப்பிடி.
எப்படிச் செய்வது?
வெங்காயத்தைத் தோல் நீக்கி, நறுக்கி, பட்டை, சோம்பு, முந்திரி, கசகசா, இஞ்சி, பூண்டு, தக்காளி, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றுடன் உப்பும் வைத்து நைசாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, அரைத்ததை நன்கு வதக்கவும். பிறகு காய்கறிகளைச் சேர்த்து ஒரு விசில் வைக்கவும். காய்கறிக் கலவை குழையக் கூடாது. பிறகு இறக்கி, உடனே தேங்காய் பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.