FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on December 26, 2012, 02:16:50 PM

Title: இந்த மணித்துளி
Post by: ஆதி on December 26, 2012, 02:16:50 PM
எவ்வளவு விலகியிருந்தும்
மறுபடியும் என்னை
தன் வட்டத்துக்குள் இழுத்துவிட்டது
இந்த மணித்துளி
 
இதன் பின் புலத்தில்
ஒளிந்திருப்பது இன்னதென‌
என்னால் ஊகிக்க இயலவில்லை
 
கைகுலுக்கல்
கை உதறல்
உதட்டு பிதுக்கல்
பெருமௌனத்தின் முடிவிலி
ஒரு திறப்பு
ஒரு சிக‌ர‌ம்
அனுபவம்
இனிய துவக்கம்
நிரந்தர முடிவு
எது எது அதனுள்
எனக்காக காத்திருக்கிறதென்று
முன்னுணர‌ இயலவில்லை
 
இந்த மணித்துளி
சூன்யத்தின் நிலமாய்
என்னை பேதமைக்கும்
அச்சத்துக்கும் இழுத்து செல்கிறது
 
அதனுள் இருந்து
திமிறி எகிறி வெளிகுதித்துவிட இயலாதபடிக்கு
அதன் பிடி இறுக்கமானதாய் உள்ளது
 
தேவ கரங்களா
நரக கரங்களா
எது என்னை பற்றியுள்ளன ?
 
இது நடந்து போகிற ஓடையா
அடித்து போகிற நதியா
உடைந்து போகிற அணையா
அமிழ்க போகிற சமுதிரமா
எது எது எது இதுவென்று யோசித்தவாறு
இதனுடன் இயந்து சுழல துவங்குகிறேன்
தப்பித்து வெளியேற வழியறியாத இயலாமையோடு
Title: Re: இந்த மணித்துளி
Post by: Global Angel on January 03, 2013, 06:52:25 PM
சில விஷயங்கள் இப்படிதான் எப்டி இருக்கும் என்னவாகும்னே தெரியாது .. ஆனால் அது நமக்கு தேவையானதாக இருக்கும் ... எதிர் பார்ப்புகளோடு பயணம் அதை பற்றி தொடரும் .. சாதகமான முடிவுகளை எதிர் பார்த்தாலும் .. பாதகமான முடிவுகள் விளைவுகள் மாற்றங்கள் கூட ஏற்படுவதுண்டு ... உதாரணமாக காதல்

அருமையான கவிதை ஆதி ...  நன்றி
Title: Re: இந்த மணித்துளி
Post by: Thavi on January 03, 2013, 09:15:17 PM
 ;Dwow kavithai kavithai supera irruku  ;D
Title: Re: இந்த மணித்துளி
Post by: ! SabriNa ! on January 05, 2013, 12:43:20 PM
dheva karangala...naraga karangala........ :P


nice lines ...aadhi!!

d title of d poem ..makes it more attractive...indha manithuli...!!