FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on December 23, 2012, 02:47:56 PM
-
மரணதேவதையே
எத்தனை பேருக்குத் தெரிகிறது
நீ தான் நிஜமென்று
வாழ்க்கை வெறும் நிழலென்று
உயிர்கள் எல்லாம்
உன் முகவரி எழுதப்பட்ட கடிதங்கள்
யார் கடித்தத்தை நீ
முதலில் உடைத்துப் பார்பாயோ
சில கடிதங்களை
அவசர அவசரமாக பிரித்துப் படிக்கிறாய்
சில கடிதங்களை
பிரிக்காமல் தள்ளி வைக்கிறாய்
உலகமே உன்
விருந்து மேசை
எல்லோருமே உனக்காக பரிமாறப்பட்டவர்களே
எப்போது எதை எடுத்து உண்பாய்
அது புரியாத புதிர்
புதிரானது உன் காதல்
உன்னை வெறுப்பவர்களை
கட்டித் தழுவுகிறாய்
உனக்காக ஏங்கித் தவிப்பவர்களையோ
அலட்சியம் செய்கிறாய்