FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: kanmani on December 20, 2012, 06:42:44 PM
-
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்: நவராத்திரி பண்டிகைக்கென்று சிறப்பான விரதம் என்று ஏதுமில்லை. மந்திரிகங்களை ஜெபிக்க வேண்டும், அது மிக முக்கியம். அடுத்த தான தர்மங்கள் செய்யனும். நவராத்திரி கொண்டாடப்படுவதே உறவை பலப்படுத்திக்கொள்வதற்காகவே. கொலு பார்க்கச் செல்லும்போது நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்று அந்த பந்தங்களை உறுதிப்படுத்திக்கொள்கிறோம். அப்போது எல்லோரும் அமர்ந்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறோம். இறைவனை நினைத்து பாடுதல், பஜனை செய்தல் ஆகியன அதற்காகவே. சிறு பிள்ளைகளை அமர வைத்து ஸ்லோகங்களையும், மந்திரங்களையும் சொல்லச் சொல்லுவது. இவை யாவும் இறைவன் மீது மனதை ஒருமுகப்படுத்துவதே.
உறவுகளுக்குள் மனஸ்தாபங்கள் இருந்தாலோ, சண்டை சச்சரவுகள் இருந்தாலோ கூட, அவைகளையெல்லாம் மறந்துவிட்டு, எல்லொரும் ஒன்றிணைந்து இறைவனை துதித்தல் இக்காலத்தில் நன்மை பயக்கும் என்பதற்காகவே இப்படிப்பட்ட விழாவையே ஒரு ஏற்பாடாக முன்னோர்கள் செய்து வைத்துள்ளனர். எனவே பக்தியுடன் கூடிய ஒருங்கிணைதல் என்பதே நவராத்திரி. அதேபோல் நமது இல்லம் நாடி வந்தவர்களை வெறும் கையோடு அனுப்பவும் கூடாது. அவர்களுக்கு ஏதாவது உணவுப் பண்டங்களை அளிக்க வேண்டும். எனவேதான் இந்த பண்டிகை காலத்தில் தான, தர்மங்கள் முக்கியமானவையாகும்.