FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on December 20, 2012, 06:37:29 PM

Title: பீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது!
Post by: kanmani on December 20, 2012, 06:37:29 PM
தினசரி அடிப்படையில் உடனடியாக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் அடியுங்கள் சரியாகிவிடும் என்கிறது ஆஸ்ட்ரேலிய ஆய்வு ஒன்று.

இதனை ஆய்வு செய்தவர்கள் பேக்கர் ஐடிஐ இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மையமாகும் இது ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது.

சிலர் உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது பீட்ரூட் ஜூஸ் அருந்தியுள்ளனர். உடனடியாக 4 முதல் 5 பாயிண்ட்கள் ரத்த அழுத்தம் குறைந்ததை கண்கூடாகக் கண்டுள்ளனர்.

ஒரேயொரு டோஸ் பீட்ரூட் ஜூஸில் ஏற்பட்டுள்ள இந்த ரத்த அழுத்தக் குறைவு ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே தினசரி அடிப்படையில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நீண்ட நாளைய ரத்த அழுத்தமும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பீட்ரூட்டில் மேலும் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஆகியவை உள்ளதோடு, நைட்ரேட் அளவும் அதிகமிருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.