FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 20, 2012, 05:00:36 AM

Title: உலகம் முடியபோவதில்லை ..
Post by: Global Angel on December 20, 2012, 05:00:36 AM
பூமி அதிர வில்லை
அடுத்தவர் புலன்களும்
செயல் மறக்கவில்லை
இருந்தும் ..
ஐம்புலனும் அடங்கி போக
அடுத்த அடி வைக்க
அவஸ்தைப்படும்
அங்கஹீனம் உடையவன் போல்
அங்கேயே துவள துடித்த கால்கள் ..
ஏதும் உறை பனி தேசத்தில்
உவப்பான ஆடை இன்றி
உபதிரவபடும் உடலை போல்
சில்லிட்டு சிலிர்த்து உதறியது உடல் ..

அதுகாறும் பல அவசரங்களுக்கு
அவசியமாய் துடித்த இதயம்
எங்கோ அடி ஆழத்தில்
துடிபிழந்து துவளும் உணர்வு
மனதெல்லாம் காதலை வைத்து
அதை வெளியிட முடியாத காதலனை போல்
திக்கி தவித்து தேடி சுழன்றது
வரட்சின் தேசத்தை
மொத்த குத்தகைக்கு எடுத்து

இரக்கமற்ற மனிதர்கள் வாழும் தேசத்தில்
மன பழக்கமற்ற அவன் ஆசைகள்
எதிர் கால கோட்டைகள்
ஒவொரு செங்கல்லாக
விலை பேச பட்டுக் கொண்டிருந்தது ..

ஏன் இந்த அறிவிப்பு
என்ன பிழை
எங்கே தவறு
எப்படி நடந்தது
கல்லு விழுந்த குளம் போல்
அந்த சொல்லு விழுந்து
குழம்பி தவித்தது மனது ...
அதிகார வர்க்கத்தின் அலட்டல்களுக்கு தெர்யுமா
உழைக்கும் வர்க்கத்தின்
குடும்ப  சுவர்கள் எல்லாம்
மாத இறுதியில் வரும்
மடித்து வைக்கபட்ட
சில ஆயிரங்களில் சாய்ந்து நிர்ப்பது ..

எதிர் காலம் கண் முன்
துகில் உரிக்கபட்ட்டுவிட்டது
எந்த கர்ணன் இன்று இருக்கின்றான்
ஓடி வந்து உதவி செய்ய ...
மனதுள் எழுந்த மலை போன்ற கேள்விகளும்
கரும் பூதம் என மிரட்ட
ஓர் அடி எடுத்து வைத்தவன்
நின்று நிதானித்து சொன்னான்
இன்றோடு என் வேலை முடியலாம்
உலகம் முடியபோவதில்லை ..
Title: Re: உலகம் முடியபோவதில்லை ..
Post by: ஆதி on December 24, 2012, 12:56:24 PM
//அதிகார வர்க்கத்தின் அலட்டல்களுக்கு தெர்யுமா
உழைக்கும் வர்க்கத்தின்
குடும்ப  சுவர்கள் எல்லாம்
மாத இறுதியில் வரும்
மடித்து வைக்கபட்ட
சில ஆயிரங்களில் சாய்ந்து நிர்ப்பது ..
//

ஒரு துயர் மிகு நிகழ்வை பதிவு செய்வது மட்டும் கவிஞரின் வேலையல்ல அதனால் விளைய போவதையும் ஆணித்தரமாய் சொல்ல வேண்டும், அந்த வேலையை மிக அழுத்தமாய் செய்திருக்கிறது இந்த மேலுள்ள வரிகள், அது மட்டுமன்று இதுதான் நடுத்தர வர்க்கத்தின் நிலை ஒருத்தனக்காக பேசாமல் ஒரு வர்கத்துக்காக பேசியது மிக சிறப்பு

உளப்பூர்வமான பாராட்டுக்கள் குளோபல் ஏஞ்சல்,