FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on September 13, 2011, 04:48:24 PM
-
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்
மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்
விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்....
அன்பால் சிரிப்பவள் அன்னை
காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி..
-
hahaha ellam sirippum paarthachu :)
-
Nandri...!!!