FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on December 14, 2012, 02:53:50 PM

Title: உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
Post by: kanmani on December 14, 2012, 02:53:50 PM
இந்த உலகில் உயிர் வாழ்வதற்காக தான் உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் அந்த உணவுகளிலேயே சில உணவுகள் மிகுந்த நன்மைகளையும், சில உணவுகள் உடலில் பிரச்சனைகளை விளைவிக்கும். பிரச்சனை என்றதும் தவறாக நினைக்க வேண்டாம், எடை அதிகரித்தல், இரத்த அழுத்தம் அதிகமாதல், கொலஸ்ட்ரால் அதிகரித்தல் போன்றவையே. ஆகவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க நிறைய பேர் டயட்டை மேற்கொள்வார்கள்.

      அதிலும் அந்த டயட்டில் இதுவரை நாம் கவனிப்பது, கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளதா, கொழுப்புகள் குறைவாக உள்ளதா என்று தானே தவிர, உடலினுள் கண்ணுக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் காயங்களை, அழற்சியை தடுக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டிருப்போமா? நமக்கு உடலின் வெளிப்பகுதியில் ஏற்படும் காயங்கள் மற்றும் அழற்சியை எளிதில் கண்களால் பார்த்து தெரிந்து கொண்டு, அதற்கான மருந்துகளை போட்டு சரிசெய்துவிட முடியும். ஆனால் உடலின் உட்பகுதியில் ஏற்படும் காயங்களை சரிசெய்ய, உணவுகள் தான் சிறந்தது.

         எனவே டயட்டை மேற்கொள்ள உணவுகளை தேர்ந்தெடுக்கும் போது, ஒரு சில அழற்சி மற்றும் காயங்களைத் தடுக்கும், உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இப்போது அந்த வகையான உணவுகளில் காயங்கள் மற்றும் உடலினுள் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!


 காளான்
 காளானில் வயிற்றில் காயங்களைக் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் எந்த ஒரு அழற்சியையும் தடுக்கலாம்.

சாலமன்
கடல் உணவுகளில் சாலமன் மீனில் நல்ல கொலஸ்ட்ராலானது நிறைந்துள்ளது. இந்த மீனை சாப்பிட்டால், அழற்சி சரியாவதோடு, அவை உடலில் உள்ள உள்காயங்களையும் சரிசெய்துவிடும்.

 ப்ராக்கோலி
 பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலி மிகவும் சிறந்த, நன்மைகள் பல அடங்கியுள்ள ஒரு காய்கறி. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, தசைகளை ஆரோக்கியமாக, காயங்களின்றி வைத்துக் கொள்கிறது.

 மஞ்சள் தூள்
 முந்தைய காலத்தில் உடலில் எந்த ஒரு பிரச்சனை அல்லது காயங்கள் என்றாலும் மஞ்சள் தூளை வைத்து தான் சரிசெய்வார்கள். நம்பமாட்டீர்கள், இந்த மஞ்சள் தூள் ஒரு சிறந்த ஆன்டி செப்டிக் மற்றும் அழற்சியை தடுக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட.

ப்ளூபெர்ரி
பெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இத்தகைய பழத்தில் ப்ளூபெர்ரி பழங்களை அதிகம் சாப்பிட்டால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலினுள் ஏற்படும் காயங்களையும் சரிசெய்துவிடும்

 இனிப்பு உருளைக்கிழங்கு
உடல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, இந்த இனிப்பு உருளைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம். இதில் இனிப்பு அதிகமாக இருக்கும் என்று யாரும் இதை தவிர்க்க வேண்டாம். இது அவ்வளவு சிறப்பான ஆரோக்கியத்தைத் தரும் கிழங்கு வகைகளில் ஒன்று.

 பப்பாளி
 பொதுவாக நாம் பப்பாளியை வயிறு உப்புசமாகவோ அல்லது எரிச்சலுடனோ இருந்தால் சாப்பிடுவோம். ஏனெனில் பப்பாளியானது வயிற்றை குளிர்ச்சியடைய செய்வதோடு, வயிற்றில் ஏற்படும் புண்களை சரிசெய்யும்.

 கிரீன் டீ
 சூடான பானங்களில் கிரீன் டீ, உடல் எடையை குறைக்கப் பயன்படுவதோட, உடலின் உள்ளே ஏற்படும் காயங்களையும் குணப்படுத்தும். ஏனெனில் கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டானது, பலவித நன்மைகளை உள்ளடக்கியது.

ஆலிவ் ஆயில்
 சமைப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய்களிலேயே ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த எண்ணெயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகமாக இருப்பதோடு, உடலின் உட்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களை சரிசெய்துவிடும்.