FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on December 12, 2012, 01:26:21 PM
-
புகைப்பிடிப்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் அந்த பழத்தை நிறுத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். ஒரு பழக்கத்தை பழகுவது எளிதானது. ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினமான செயல். அதிலும் தீயப்பழக்கங்களை நிறுத்துவது தான் மிகவும் கஷ்டமான விஷயம். அந்த தீயப்பழக்கங்களில் புகைப்பிடித்தால், உடலுக்கு என்ன கேடு ஏற்படும் என்பது நன்கு தெரியும். அதிலும் அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் உடலில் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நுரையீரல் பாதிப்பப்பட்டு, நாளடைவில் அழிந்துவிடும். சிலர் இந்த விஷயம் தெரிந்து, இந்த மாதிரியான கெட்டப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும் நீண்ட நாட்கள் பிடித்த சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உடலிலேயே தங்கியிருக்கும். இவை நீண்ட நாட்கள் உடலில் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அத்தகைய நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்ற சில உணவுகள் இருக்கின்றன. அந்த உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டின் வெளியேறிவிடும். பொதுவாக புகைப்பிடித்தால் உடலில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ சத்துக்கள் குறைந்துவிடும். இந்த சத்துக்கள் தான் நுரையீரலை பாதுகாக்கின்றன. ஆகவே இந்த சத்துக்கள் நிறைந்து உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றிவிடலாம். சரி, இப்போது உடலில் இருந்து நிக்கோட்டினை வெளியேற்றும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
தீங்கை விளைவிக்கும் நிகோட்டினை வெளியேற்றும் உணவுகள்!!!
ப்ராக்கோலி
இந்த காய்கறியில் வைட்டமின் சி மற்றும் பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதிலும் புகைப்பிடித்தால், உடலில் உள்ள வைட்டமின் சி சத்தானது குறைந்துவிடும். ஆகவே இந்த காய்கறியை அதிகம் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டை தவிர்ப்பதோடு, புகைப்பிடிப்பதால் சேரும் நிக்கோடின் அளவை குறைத்துவிடும். அதுமட்மின்றி, இவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறையும்.
கேரட் ஜூஸ்
ஒரு முறை புகைப்பிடித்தால், அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் 3 நாட்களுக்கு உடலில் இருக்கும். அதிலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால், நிக்கோட்டின் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்தின் பொலிவை கெடுத்துவிடுகிறது. எனவே அவ்வாறு பாதிப்படையும் சருமப் பொலிவை கேரட் ஜூஸ் மீட்டு தரும். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி, உடலில் தங்கியிருக்கும் நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
தீங்கை விளைவிக் பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் அதிக வைட்டமின்கள் இருப்பதோடு, ஃபோலிக் ஆசிட் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் கர்ப்பிணிகள் உடலில் நிக்கோட்டின் அதிகமான உள்ளது என்று கவலைப்பட்டால், அப்போது பசலைக் கீரையை அதிகம் வாங்கி சாப்பிடுவது நல்லது
மாதுளை
இந்த சிவப்பு நிற பழமானது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது. ஆகவே அதிக அளவு நிக்கோட்டின் உடலில் இருப்பது போல் உணர்ந்தால், அதாவது அதிக அளவில் புகைப்பிடித்துவிட்டால், மாதுளையை சாப்பிடுவது நல்லது. இதனால் நிக்கோட்டின் வெளியேறுவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
கிவி
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கிவி பழம், உடலில் உள்ள நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும் தன்மையுடையது. எனகே கிவிப் பழத்தை சாப்பிட்டு, நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்றிவிடுங்கள்.
பெர்ரி
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றுவதோடு, ஆபத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்களையும், உடலில் இருந்து வெளியேற்றிவிடுகிறது.
காய்ந்த மூலிகைகள்
காய்ந்த மூலிகைகளும் உடலில் உள்ள நிக்கோட்டின் அளவை குறைத்துவிடும். அதிலும் ரோஸ்மேரி, பார்ஸ்லே, பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய், பூண்டு பொடி மற்றும் பல மூலிகைப் பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளது.
தண்ணீர்
அதிகமாக புகைப்பிடித்தால், உடலில் வறட்சியை ஏற்படுவதோடு, தீங்கை விளைவிக்கும் நிக்கோட்டின் அளவும் அதிகமாகும். ஆகவே அதிக அளவில் தண்ணீர் குடித்தால், எந்த ஒரு நச்சுப் பொருளையும், உடலில் தங்க விடாமல் தடுக்கலாம்.