FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on December 11, 2012, 08:57:40 PM

Title: வாழ்க்கை எனும் மகாநதி
Post by: தமிழன் on December 11, 2012, 08:57:40 PM
இருளை துரத்தி வரும் வெளிச்சம்
வெளிச்சத்தை விழுங்க வரும் இருள்

இன்பம் துன்பம்
வருத்தம் மகிழ்ச்சி
தோற்றம் மறைவு இப்படி
இரண்டு கரைகளினூடாக ஓடுவதே
வாழ்க்கை எனும் மகாநதி

இதில் கரைபுரளுவதும்
கரையை முட்டி மோதுவதும்
மனித முயற்சியின் பிராயத்தங்கள்

சிலரது வாழ்வு
கரைக்கு அடங்கி
இரண்டு கரைகளுக்குள்ளும்
அது போகும் பாதையில் போய்
நதியை அடைந்து
அதில் கலந்து முடிந்து போகும்
நதிக்கு ஒப்பானதாக இருக்கும்

சிலரது வாழ்வு
இரண்டு கரைகளையும் மீறி
கட்டுப்பாட்டை இழந்து
தானும் அழிந்து மற்றவரையும் அழிக்கும்
நதிக்கு ஒப்பானதாக இருக்கும்
Title: Re: வாழ்க்கை எனும் மகாநதி
Post by: Global Angel on December 14, 2012, 05:52:17 PM
கவிதை நன்று தமிழன் வாழ்க்கை பற்றிய அருமையான தத்துவம் ... வாழ்க்கை எம்மை வெல்வதர்க்குல் வாழ்கையை நாம் வெல்ல வேண்டும் அப்போதுதான் வெற்றி வசமாகும் .... அருமை