FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: kanmani on July 14, 2011, 12:09:33 AM
-
எப்படி சொல்வேன்
எப்படி சொல்வேன்
எப்படி சொல்வேன்
நீயில்லா நிமிடங்களை......
உன்னுடன் வாழ்ந்த
தருணங்களை.....
அவ்வப்போது சொல்லும்
அழகான பொய்களை ,
இதழோரம் பூக்கும்
புன்னகையுடன்
கேட்டுச்சிரிக்கும்
அந்த புன்னகையை.....
தாமதமாய் வந்த போது
கோபத்தை கண்ணில் கலந்து,
மௌனத்தால் ,
தண்டிக்கும் அந்த
தருணங்களை...
சின்ன சின்ன சண்டையிட்டு
பொய்க்கோபம் கொண்டு ,
என் தவிப்பை கண்டு,
உள்ளூர சிரிக்கும்
உன் உதடுகளை....
காதலில் கனிந்து நீ
செய்த குறும்பு தனங்களில்
நான் படும் அவஸ்தையை,
ரசித்து சிரித்த உன்
கண்களினை ....
கவலையில் மனம் வாடியபோது
கண்ணில் கருணை
கொண்டு, நான் சாய
தோள் கொடுத்த அந்த
மென்மையினை...
இழந்து தவிக்கிறேன் ..
நீ இல்லாமல் தவிக்கிறேன்..
முகம் காண துடிக்கிறேன்...
காதலில் கசங்கிய என்
இதய வலியை...
எப்படி சொல்வேன்?...
சூழ்நிலை கைதியாகி,
என்னை மட்டும் தவிக்கவிட்டு,
இதயம் பிடுங்கி சென்றாய் ,
எங்கோ ஒளிந்து கொண்டாய்.,
எப்படி சொல்வேன்
நீயில்லா நிமிடங்களை ......
உன்னுடன் வாழ்ந்த
தருணங்களை.....
-
என் உயிர்த்தோழி.....
என் உயிர்த்தோழி.....
பால்ய கால பருவங்களில்
பட்டாம்பூச்சி பிடித்து,
பறக்கவிட்டு கைதட்டி
குதித்தோம்....
பள்ளிக்கூட பருவங்களில்
எழுதாமல் பாசாங்கு செய்து,
அரட்டை அடித்தோம்....
தேர்வுக் கூடங்களில்
விடைகளை மறந்து,
திருதிருவென விழித்தோம்...
மழலை காலங்களில்
மணல் மாளிகைகளும்,
களிமண் பொம்மைகளும்
பங்கெடுத்து கொண்டன
நம் விளையட்டுகளில்....
பாடல் வரிகளெல்லாம்
பாடமாய் கற்று
பாடிக்களித்தோம்.....
விடுமுறை நாட்களிலும்,
விடுமுறை விட்டதில்லை
நம் சந்திப்பிற்கு....
சிறுசிறு சண்டைகளில்
வனவிலங்குகளின்
பெயர்களால்
அர்ச்சித்துக்கொண்டோம்...
நம் முகவாட்டம் காணச்
சகிக்கா நம் பெற்றோர்
சேர்த்து வைப்பர்
ஸ்நேகிதி என்று....
கல்லூரி கதைகளை
விடுமுறை நாட்களில்
விவரித்து மகிழ்ந்தோம்...
நீ ஓர் மூலையிலும், நான்
ஓர் மூலையிலும், திருமணம்
திருப்பிபோட்டது நம் வாழ்வை...
இயந்திர வாழ்க்கைக்கு
இடையே அவ்வப்போது
தொடரும் தொலைபேசி
கதைகளுடன் சிக்கி
கிடக்கிறது நம் நட்பு....
உன் நினைவுகள் என்னை
தழுவும்போது, தானாகவே
வந்து விழுகின்றன
கண்ணீர் துளிகள்....
காலமும் கடக்கிறது
நம் கனவுகளை கிழித்து........
-
பார்வை பரிமாற்றம்!!!!!!
ஒவ்வொரு முறையும் உன்னை ஆழமாக
வாசிக்க முயன்றேன்! உன்
கண்கள் வழியாக!!!!
வாசிக்க ஆரம்பித்த உடனே
முடிந்துவிடும் நம் சந்திப்பு
தினம் தினம் வார்த்தைகள்
சேராமல் முடிந்துவிடும்
நம் பார்வை பரிமாற்றம்!!!!!!
எப்படியாவது வாசிக்க எண்ணி,
காத்திருந்தேன், நீ தினம்
செல்லும் சாலையில்...
உன் கால் கொலுசின் ஓசைக்கேட்டு
ஆனந்தமாய் திரும்பிய
எனக்கு, அதிர்ச்சியை பரிசளித்தாய்!
என் தோழனுடன் வந்து!!!!
உணர்ந்து கொண்டேன் உன்
பார்வையில் விளைந்த
வார்த்தைகளை! நீ சொல்லி
புரிய வேண்டியதில்லை எனக்கு
சேர்த்துவைப்பேன்
எப்படியாவது என்றேன்
என் காதலை கொன்று.....!!
-
nice nice kanu
-
nice kavithaikal kannumani ;)
-
இழந்து தவிக்கிறேன் ..
நீ இல்லாமல் தவிக்கிறேன்..
முகம் காண துடிக்கிறேன்...
காதலில் கசங்கிய என்
இதய வலியை...
எப்படி சொல்வேன்?...
சூழ்நிலை கைதியாகி,
என்னை மட்டும் தவிக்கவிட்டு,
இதயம் பிடுங்கி சென்றாய் ,
எங்கோ ஒளிந்து கொண்டாய்.,
எப்படி சொல்வேன்
நீயில்லா நிமிடங்களை ......
உன்னுடன் வாழ்ந்த
தருணங்களை.....
indha lines romba azhaga irukku akka.. enaku romba pidichathu.. aluga vaaruthu.. thozhi patriya kavidaiyum matha kavidaiyum.. very true lines...