ராம் மனோகர் லோகியா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fcommons%2Fthumb%2F1%2F14%2FLohia-full.jpg%2F220px-Lohia-full.jpg&hash=905543308ae05cb2103846e2ba65df4de458d39a)
பிறப்பு : மார்ச்சு 23, 1910
அக்பர்பூர், அம்பேத்கர் நகர், உத்தரப்பிரதேசம், பிரித்தானிய இந்தியா
இறப்பு :அக்டோபர் 12 1967 (அகவை 57)
புது தில்லி, இந்தியா
தேசியம் : இந்தியன்
கல்வி: இளங்கலைப் பட்டம் பி.ஏ
படித்த கல்வி நிறுவனங்கள் : கொல்கத்தா பல்கலைக்கழகம்
அறியப்படுவது: வெள்ளையனே வெளியேறு இயக்கம்
பெற்றோர்: ஹரிலால்-சாந்தா
ராம் மனோகர் லோகியா (Rammanohar Lohia:மார்ச்சு 23,1910- அக்டோபர் 12, 1967) அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்திய பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்.