FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on December 11, 2012, 09:16:27 AM

Title: ஜில்லுன்னு ஐஸ் டீ குடிக்கிறீங்களா? கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்களேன்!
Post by: kanmani on December 11, 2012, 09:16:27 AM
அதிக அளவில் ஐஸ் டீ குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ், டீ குடிப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆக்சலேட் வேதிப்பொருள் ஐஸ், டீயில் அதிகமாக உள்ள ஆக்சலேட் என்னும் திடப்பொருள் கலவை சிறுநீரக கற்களை உருவாக்கும் மூல வேதியல் பொருள் என அறியப்பட்டுள்ளது. இவை சிறுநீரில் உப்பாகவும், தாதுக்களாகவும் தேங்கி நின்று சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன என்று சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். தண்ணீரை விட சுவையாக உள்ளது. குறைந்த கலோரிகளை கொண்டது என்பதற்காக ஏராளமான மக்கள், அதிகமாக ஐஸ், டீயை பருகும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். அடிக்கடி குடிக்காதீங்க ஆக்சலேட் படிமங்கள் தீங்கற்றவையாக கருதப்பட்டாலும், இவை பெரிய அளவில் வளர்ந்து சிறுநீரக பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. எனவே இந்தியாவின் தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஐஸ், டீ குடிக்கும் பழக்கத்தை நாம் கைவிடவேண்டும் என்று சிறுநீரகவியல்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எதை சாப்பிடக்கூடாது மேலும், ஆக்சலேட் எனப்படும் மூலப்பொருள் அதிகம் கொண்ட பசலைக்கீரை, சாக்லேட், உப்பு, பயறு மற்றும் இறைச்சி வகைகளும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் காரணிகளான பிற உணவுகளையும் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிங்க சிறுநீரக கல் அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் சிறுநீரக கற்களின் வளர்ச்சியை எலுமிச்சைப்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டுக்குள் வைக்கும். எனவே எலுமிச்சை ரசம், ஜூஸ், பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து விடுபட முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.