முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்றால், நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறோம் பெரிய குற்றத்தை அல்லது பொய்யை மறைக்க முயல்வது என்று, ஆனால் உண்மையில் அதற்க்கு அர்த்தம் வேறு
விவசாயத்தையே நம்பி வாழும் குமரன் தன் தோட்டத்தில் தனது கடும் உழைப்பினால் பூசணிக்காய் கொடிகளை விதைத்து இருந்தான். அவனது உழைப்பின் பயனாக அவனது தோட்டத்தில் பூசணிக்காய்கள் ஒவ்வொன்றும் மிகவும் செழிப்பாக வளர்ந்து இருந்தன. இதனைக்கண்ட பக்கத்து தோட்டக்காரன் வேலவன். தினமும் சில பூசணிக்காய்களை களவாடி விற்று வந்தான்.
தினமும் சில பூசணிக்காய்கள் மாயமாய் மறைவது குமரனுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஒரு முறை தனது சொந்த ஊருக்கு சில நாட்கள் சென்று வந்த குமரன், தன் தோட்டத்தில் பெரும்பகுதியில் இருந்து வந்த பூசணிக்காய்கள் களவாடு போய் இருப்பதை பார்த்த அதிர்ச்சியில் மனம் நொந்து உறைந்தே போனான்.
அப்போது அக்கம் பக்கதினர் மூலமாக தனது தோட்டத்தில் களவாடியது வேலவன்தான் என்பதை அறிந்து, அவனது வீடு நோக்கி சென்ற பொழுது, அவன் வருவதை முன்பே அறிந்தது போல வேலவன் புன்முருவளுடுன் வீட்டினுள் வரவேற்றான். குமரனை எதுவும் பேச விடாமல் அவனை வரவேற்று அறுசுவை உணவு விருந்து படைத்தான் வேலவன்.
அவன் படைத்த விருந்து உணவை உண்ட பின்பு அவனிடம் எதுவும் சண்டை போட இயலாமல் குமரன் திரும்பிவிட்டான் தன் வீட்டிற்கு. இவ்வாறாக அவன்திருடிய பூசணிக்காய்களை (குற்ற்றத்தை), சோற்றால் மறைத்து விட்டான்.
இக்காலத்திலும் சில வேலவன்கள், குற்றத்தையும் செய்து விட்டு, அவர்களை செல்லமே , வைரமே என்று வசை பாடி மறைக்க முயலுகிறார்கள், ஆனால் வாய் மூடி செல்வதற்கு எல்லோரும் குமரன் அல்லவே!!!!!!!
Title: Re: "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
Post by: Global Angel on July 14, 2011, 03:47:06 AM