FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on December 05, 2012, 10:03:49 AM

Title: வறட்சியான சருமத்திற்கான மேக்-கப் டிப்ஸ்....
Post by: kanmani on December 05, 2012, 10:03:49 AM
வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு எப்போதும் தொந்தரவு இருக்கும். ஏனெனில் அப்போது சருமத்தில் ஒருவித கோடுகள் போன்ற தோற்றம் தெரியும். இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு, அசிங்கமாக இருக்கும். மேலும் அந்த வறட்சியை போக்குவதற்காக சிறிது ஆலிவ் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தாலும், சருமம் அதிக எண்ணெய் பசையுடன் காணப்படும். இதனால் தான் இதற்கு மேக்-கப் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வது. ஏனெனில் மேக்-கப் செய்வதால், அத்தகைய வறட்சியை போக்கலாம். சரி, இப்போது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான மேக்-கப் டிப்ஸ் என்னவென்று பார்ப்போமா!!!

makeup tips dry skin

* எந்த வகையான சருமம் இருந்தாலும், மேக்-கப் போடுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். அதேப் போல் மேக்-கப்பை இரவில் படுக்கும் முன்பும் நீக்கிவிட வேண்டும். ஏனெனில் அப்போது தான் சரும செல்கள் எளிதில் மூச்சுவிட முடியும். இல்லையெனில் மேக்-கப் போடுவதற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள் சரும செல்களை பாதிக்கும்.

* மேக்-கப் போடுவதற்கு 10-20 நிமிடத்திற்கு முன், கிளின்சிங் மில்க் வைத்து கிளின்ஸ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கிவிடுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். பின்னர் கிளின்ஸ் செய்து காய வைத்தப் பின்னர், சிறிது நேரம் கழித்து, மேக்-கப் போட வேண்டும். இதனால் சருமம் வறட்சியின்றி எண்ணெய் பசையுடன் இருக்கும்.

* மேக்-கப் டிப்ஸில் வறட்சியை நீக்க சிறந்த வழி என்னவென்றால், அது ஃபௌண்டேஷனுடன் சிறிது மாய்ச்சுரைசரை சேர்த்து கலந்து தடவியப் பின், மேக்-கப் போட வேண்டும். ஒரு வேளை கிளின்சிங் மில்க் வைத்து செய்துவிட்டால், அதிகமான அளவில் மாய்ச்சுரைசரை ஃபௌண்டேஷனுடன் சேர்க்க கூடாது.

* வறட்சியான சருமம் இருந்தால், கன்சீலரை பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமெனில் அப்போது, ஃபௌண்டேசனை விட லைட்டான நிறத்தல் இருக்கும் கன்சீலரைப் பயன்படுத்த வேண்டும்.

* மேக்-கப் போடுவதற்கு முன் ஜெல் பயன்படுத்துவதற்கு பதிலாக கிரீமி ப்ளஷ்ஷை பயன்படுத்த வேண்டும். அதிலும் மிகவும் லேசான நிறத்தில் கன்னங்களில் அவற்றை தடவ வேண்டும்.

* எப்போது சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதோ, அப்போது சருமத்திற்கு எந்த ஒரு பவுடரையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை மேலும் சருமத்தை அசிங்கமாக காண்பிக்கும். ஒரு வேளை மாய்ச்சுரைசர் வேலை செய்யவில்லை என்றால், அப்போது மிகவும் லேசாக மேக்-கப் போட்டாலே போதுமானது.

இவையே வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான சில மேக்-கப் டிப்ஸ். வேறு ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.