FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on December 05, 2012, 09:55:49 AM

Title: ஃபுரூட் சாண்ட்விச்
Post by: kanmani on December 05, 2012, 09:55:49 AM


தற்போது சாண்ட்விச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் சாண்ட்விச் மூலம் உடலை ஆரோக்கியமாக வைக்கலாம். எப்படியெனில் சில சாண்ட்விச்-களை பிடித்த காய்கறிகள், பழங்களை வைத்து, அடுப்பில்லாமல் தயார் செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு காலை வேளையில் பழங்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் பிரட் துண்டுகள் இருந்தால், அவற்றை வைத்து, ஒரு சாண்ட்விச் செய்து கொடுக்கலாம். இப்போது அந்த மாதிரியான சாண்ட்விச்-களை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

fruit sandwich recipe

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 6
வாழைப்பழம் - 2 (நறுக்கியது)
மாதுளை விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் - 1 (நறுக்கியது)
அன்னாசி ஜாம் - 1/2 கப்
கருப்பு உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/2 கப்
ஸ்ட்ராபெர்ரி - 3-4 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளின் பக்கவாட்டில் உள்ளவற்றை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் பிரட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும், மறுபக்கத்தில் அன்னாசி ஜாமையும் தடவி, ஒரு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் மாதுளை விதைகளை, வெண்ணெய் தடவிய பக்கத்தில் அழகாக வைக்க வேண்டும்.

பின்பு அதன் மேல் கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் மிளகு தூளை தூவ வேண்டும்.

பின் அந்த பிரட் துண்டுகளை, வரிசையாக அடுக்கி வைத்து, இரண்டாக வெட்டி, ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.

இப்போது அருமையான ஃபுரூட் சாண்விட்ச் ரெடி!!!
Title: Re: ஃபுரூட் சாண்ட்விச்
Post by: Gotham on December 05, 2012, 10:28:04 AM
Appadiye saapidalaam.aa  :o