விபத்துக்களை விலைக்கு வாங்கும் வாகன ஓட்டுபவர்களின் மொபைல் பேச்சு...(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F399232_310531412385699_1233343998_n.jpg&hash=c7e69bed760e234e359e6d6b507b38b36d0ff338) (http://www.friendstamilchat.com)
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப் பட்டுள்ள மொபைல் போன் இல்லாதவர்களே இன்று இல்லை என்று சொல்லலாம் . நமது வசதிக்காக வரப்பிரசாதம் போல் கிடைத்து உள்ள இவற்றை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும்.
நமக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனத்தை நம் உயிருக்கு உலை வைக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களை ஒட்டிச்செல்லும் போது மொபைல் பேசுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆங்காங்கே ஏற்படும் விபத்துக்களுக்கு மொபைல் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் காரணமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரும், கார், லாரி டிரைவர்களும் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன.
இதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. ஒவ்வொரு வாகன விதிமீறல் களையும் சட்டம் போட்டு தடுப்பது என்பது இயலாத காரியம்.
தங்கள் உயிர், குடும்பம் மேல் அக்கறை உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் விபத்துகளை நாம் தடுக்கலாம்....!