FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on December 03, 2012, 02:56:16 PM

Title: ஹக்கா சில்லி சிக்கன் - சைனீஸ் ரெசிபி
Post by: kanmani on December 03, 2012, 02:56:16 PM


சைனீஸ் உணவுகளில் ஹக்கா நூடுல்ஸ் தான் மிகவும் பிரபலமானது. இந்த மாதிரியான ஹக்கா ரெசிபிக்கள் கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தெற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாக உள்ளது. சொல்லப்போனால், இந்த மாதிரியான ஹக்கா ரெசிபிக்கள் ஹக்கா உணவகங்களில் தான் கிடைக்கும். ஆனால் தற்போது அந்த சைனீஸ் ரெசிபியை வீட்டிலேயே ஈஸியாக தயாரிக்கலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

hakka chilli chicken chinese recipe
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 6-7 (லெக் பீஸ், சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை கலந்து, அதனை சிக்கன் துண்டுகளின் மேல் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகப் பொடி மற்றும் மல்லிப் பொடியை சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி, அதனை ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு, துண்டுகள் பொன்னிறமாகும் வரை வேக வைக்க வேண்டும்.

துண்டுகளானது பொன்னிறமானதும், தட்டில் எடுத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் தண்ணீரை ஊற்றி, மீதமுள்ள சோள மாவு, உப்பு, சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கிரேவியானது நன்கு கொதித்து கெட்டியானதும், அதனை இறக்கிவிட வேண்டும்.

இப்போது சுவையான ஹக்கா சில்லி சிக்கன் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிடலாம் அல்லது ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.