FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 28, 2012, 12:38:26 PM

Title: சுரைக்காய் அடை
Post by: kanmani on November 28, 2012, 12:38:26 PM
புழுங்கல் அரிசி 900 கிராம்
சுரைக்காய் பெரியது ஒன்று அல்லது சுமாரான
அளவிலுள்ள சுரைக்காய் இரண்டு
கடலை பருப்பு 150 கிராம்
மல்லித்தழை ஒரு கட்டு
கறிவேப்பிலை 3 கொத்து
சோம்பு இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் பத்து கிராம்
மிளகு இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் பத்து கிராம்
மிளகு இரண்டு ஸ்பூன்
சீரகம் இரண்டு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பசு நெய் நூறு கிராம்
முந்திரி பருப்பு 100 கிராம்
புழுங்கல் அரிசியை இரவில் கல் நீக்கி களைந்து ஊறவைக்கவும். மறுநாள் காலை கிரைண்டரில் அரிசியைப் போடவும். இத்துடன் சுரைக்காயை தோல், விதை, சதைப்பகுதி அனைத்தையும் சிறுசிறு துண்டுகளாக அரிந்து கிரைண்டரில் போடவும். மிளகாயை சிறுசிறு துண்டுகளாக கிள்ளி கிரைண்டரில் போடவும். கிரைண்டரை ஓட விடவும். மாவு பாதி மசிந்ததும் உப்பைப் போடவும்.
மாவை அரைக்கும் போதே ரவைக்கும் சற்று கூடுதலான கரகப்பில் பார்த்து வழித்து ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் கடலை பருப்பைப் போட்டு நன்றாகக் கலந்துவிட வேண்டும். இவ்வாறு கலந்த மாவை ஒரு மணி நேரம் கடலை பருப்பு மாவின் ஈரத்தில் ஊறவைக்கவும். பிறகு மிளகு, சீரகம் இவற்றை தூள் செய்துப்போடவும். கறிவேப்பிலையை ஒன்றிரண்டாக நறுக்கிப் போடவும்.

சோம்பை தூள் செய்துப் போடவும். மல்லித்தழையை அலசிப் பிழிந்து, அடுக்காக வைத்துக் கொண்டு தூளாக அரிந்து மாவில் போடவும்.

முந்திரிப்பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து மாவில் போடவும். (முந்திரிபருப்பின் சுவை அதிகம் வேண்டுமாயின் 150 கிராம் அல்லது 200 கிராமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.)

மாவை கரண்டியால் நன்கு கலக்கி (விருப்பம் போல்) தோசைமாவு பதம் (அல்லது) இட்லி மாவு பதத்தில் கரைத்து, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் விளக்கெண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக இழுத்து ஊற்றவும்.

ஒரு தடடைப் போட்டு மூடவும். சிறிது நேரம் கழித்து தட்டை எடுத்து விட்டு ஒரு ஸ்பூன் நெய்யை சுற்றிலும், நடுவிலும் விட்டு மூடவும். சிறிது நேரம் கழித்து அடையை திருப்பிப் போடவும். மறுபடி ஒரு ஸ்பூன் நெய்விட்டு மறுபுறம் சிவக்க வெந்ததும் எடத்துவிடவும்.

இவ்வாறு ஒவ்வொறு அடையாக ஊற்றி, எடுத்து வைத்துக் கொண்டு தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.