தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on November 27, 2012, 04:36:06 PM
Title: எங்கிருந்து வந்தாய் நீ
Post by: Dharshini on November 27, 2012, 04:36:06 PM
எங்கிருந்து வந்தாய் நீ என்னுள் இருந்த பெண்மையை மிளிர வைக்க என்னுள்ளும் உணர்வுகள் உண்டென உணரவைக்க! எனக்கும் ஆசைகள் உண்டென அறியவைக்க என்னுள்ளும் மாற்றங்கள்??? அறிந்ததும் வியந்தேன்! என்னை எனக்கே புரிய வைத்தது நீ புரிந்தது அதுமட்டும் அல்ல இந்த மலரை பூக்க செய்ய கூடிய சூரியனும் நீயே மழைதுளி பூமியை நனைத்தது போல என்னுளும் காதலை விதைத்தவனும் நீயே வாய்பேசும் மொழி மறக்க வைத்து கண் பேசும் மொழியை அறிய வைத்தவனும் நீயே என் அடையாளம் எது – இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தில் உன்னுடன் இருப்பதா? - இல்லை உன் நினைவுகளுடன் வாழ்வதா முடிவு எதுவாயினும் சந்தோஷமே எனக்கு உன்னில் எனை தொலைத்தால்
Title: Re: எங்கிருந்து வந்தாய் நீ
Post by: ! SabriNa ! on November 28, 2012, 12:03:28 PM
எங்கிருந்து வந்தாய் நீ naan inga thaan irundhen...............
Title: Re: எங்கிருந்து வந்தாய் நீ
Post by: Dharshini on November 28, 2012, 03:30:05 PM
nakkals unaku:D ne heart la thane iruka
Title: Re: எங்கிருந்து வந்தாய் நீ
Post by: பவித்ரா on December 02, 2012, 02:54:48 AM
முடிவு எதுவாயினும் சந்தோஷமே எனக்கு உன்னில் எனை தொலைத்தால்
valikuthuda antha line padikum pothu un valiyum puriyuthada nice
Title: Re: எங்கிருந்து வந்தாய் நீ
Post by: Thavi on December 03, 2012, 02:07:39 AM