FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on November 26, 2012, 09:20:12 PM

Title: ~ சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் !! ~
Post by: MysteRy on November 26, 2012, 09:20:12 PM
சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் !!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F542687_308577572581083_1046617017_n.jpg&hash=5aee8416de261fedaf9bd79faabb14c1117e9729) (http://www.friendstamilchat.com)

உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம் சீனாவில் தான் உள்ளது சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் ஆகும்.

78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.