Posted by: Yazhini
« on: July 08, 2026, 07:58:27 AM »இங்கு கடிகார முட்கள்
காணாமல் போய் விடும்..
காணும் காட்சிகள் யாவும்
சிறகின்றி விண்ணில் பறந்திட செய்யும்....
கோபமான வார்த்தைகளும் ஒருவர்மீது
மற்றொருவரின் அன்பைக் காட்டிடும்....
ஒருவரின் கண்ணில் மற்றொருவரின்
உலகையே காண செய்திடும்...
நீ என்ற வார்த்தை
அவசொல்லாக மாறி விடும்...
நாம் என்பதே அன்பின்
முழுமை என உணர்த்திடும்....
கடந்து வந்த பாதைகள்
கடினமான பயணமாக இருப்பினும்
இருவரின் அன்பின் காவியத்தை
அதுவும் சேர்ந்து எழுதிடும்...
தேடல்களில் கால்கள் வெவ்வேறான
திசைகளில் சுற்றி திரிந்தாலும்
காந்தகத்தின் ஈர்பைப் போன்று
இருவரையும் அன்பு ஈர்த்திடும்
தோள்கள் சாய்ந்து கைக்கோர்த்து
கதைகள் பேசியே வாழ்க்கை நகர்ந்திடும்...
நடை தளர்ந்து நரைக்கூடினும்
மடைத் திறந்த அன்பு இது...
இது உணர்வுகளின் கூடல்...
சுயத்தை தேடிடும் தேடல்....
காமமற்ற காதல்....
காணாமல் போய் விடும்..
காணும் காட்சிகள் யாவும்
சிறகின்றி விண்ணில் பறந்திட செய்யும்....
கோபமான வார்த்தைகளும் ஒருவர்மீது
மற்றொருவரின் அன்பைக் காட்டிடும்....
ஒருவரின் கண்ணில் மற்றொருவரின்
உலகையே காண செய்திடும்...
நீ என்ற வார்த்தை
அவசொல்லாக மாறி விடும்...
நாம் என்பதே அன்பின்
முழுமை என உணர்த்திடும்....
கடந்து வந்த பாதைகள்
கடினமான பயணமாக இருப்பினும்
இருவரின் அன்பின் காவியத்தை
அதுவும் சேர்ந்து எழுதிடும்...
தேடல்களில் கால்கள் வெவ்வேறான
திசைகளில் சுற்றி திரிந்தாலும்
காந்தகத்தின் ஈர்பைப் போன்று
இருவரையும் அன்பு ஈர்த்திடும்
தோள்கள் சாய்ந்து கைக்கோர்த்து
கதைகள் பேசியே வாழ்க்கை நகர்ந்திடும்...
நடை தளர்ந்து நரைக்கூடினும்
மடைத் திறந்த அன்பு இது...
இது உணர்வுகளின் கூடல்...
சுயத்தை தேடிடும் தேடல்....
காமமற்ற காதல்....

